வடமாகணசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றது..?
(உமர் அலி முகம்மதிஸ்மாயில்)
எதிர்வரும் இருபத்தோராம் திகதி சனிகிழமை நடைபெறஇருக்கும் வடமாகாண சபை தேர்தலை சர்வதேசமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.
யாழ்ப்பாண மாவட்டம்
இந்தத்தேர்தலில் தேர்தலில் மாவட்டரீதியாக உள்ள வாக்காளர்களை மனதில்கொள்வோமானால் யாழ்ப்பான மாவட்டத்தில் 426813 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.2010ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலின் போதும்இபாராளுமன்ற போதுத்தேர்தலின்போதும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின்போது கட்சி ரீதியாக பிரதான கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளினையும் மனதில்கொண்டு எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் கட்சிகள் பெறப்போகும் வாக்குகளினை ஓரளவு அனுமானிக்க முடியும் .
வடமாகாணத்தைப்பொறுத்தவரை கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகுகளை விட இம்முறை வாக்களிப்பு வீதம் கணிசமான அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு ஏனெனில் தமிழ் தமது விடுதலை உணர்வுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு இறுதிக்கேடயமாக அல்லது இறுதித்துருப்பாக இந்த வாய்ப்பை கருதுகிறார்கள் அந்தவகையில் 50 வீத வாக்குப் பதிவு நடைபெற்றால் 16 அங்கத்தவர்களை தெரிந்தெடுக்கப்போகின்ற யாழ் மாவட்டத்தில் 213400 வாக்குகள் அளிக்கப்படலாம்.
அந்த வாக்குளில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு 160000 வாக்குகளையும் பொதுசன ஐக்கிய கூட்டமைப்பு 50000 வாக்குகளையும் பெற வாய்ப்பிருக்கின்றது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் வாக்குகள் சரிவடைந்தால் அந்த வாக்குகள் பொதுசன ஐக்கிய முன்னணியை போய்ச்சேரலாம்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளினை அடிப்படையாகக்கொண்டு ஒரு அங்கத்தவரை பெற தேவைப்படும் வாக்குகள் 13337 ஆக இருக்கும்..150000 வாக்குகளைப்பெறும் தமிழ் கூட்டமைப்பு 11 ஆசனங்களைத் தனதாக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கின்றது. 60000 வாக்குகளைப்பெற்ற பொதுசன ஐக்கிய முன்னணி 4 ஆசனங்களை பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஐந்தாவது ஆசனத்திற்கு முன்னணியும் 12ஆவது ஆசனத்துக்கு கூட்டமைப்பும் சரியான போட்டியிலிருக்கும்.
ஆக யாழ்பாணத்தில் தமிழ் கூட்டணி 1112 ஆசனங்கள் பொதுசன ஐக்கிய கூட்டணி 5/4 ஆசனங்கள் பெற வாய்ப்புண்டு. இறுதியில் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் 5000/6000 வாக்குகளே எஞ்சிய வாக்குகளாக இருக்கும் அந்த எஞ்சிய வாக்குகளை விட ஒன்றாவது கூட எடுக்கும் கட்சி ஆசனத்தைத்தட்டிக்கொள்ளும். ஐக்கிய தேசய கட்சி ஒரு மூன்றாயிரம் வாக்குகளை எடுக்கலாம்.
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்டத்தைபொறுத்தவரை கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் மக்கள் வாக்களித்த முறைகளை நோக்குமிடத்து இம்முறை சற்று அதிகரித்த வாக்களிப்பு நடைபெற வாய்ப்புண்டு.
மொத்தமாக உள்ள 75737 வாக்காளர்களில் 60 வீதமானவர்கள் வாக்களிப்பின் ஏறக்குறைய 45000 வாக்குகள் அளிக்கப்படும் அந்த 45000 வாக்குகளும் 5 மாகாண பிரதிநிதிகளை தெரிவு செய்யப்போகின்றது.மிழ் கூட்டமைப்பு கிட்டத்தட்ட 21-21500 வாக்குகளையும் இஅரச கூட்டணி 19000-20500 அளவிலான வாக்குகளையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 7000-7500 வரையான வாக்குகளையும் பெறுவதற்குரிய வாய்ப்பு உண்டு.இதன் அடிப்படையில் இரண்டு ஆசனங்கள் தமிழ் கூட்டமைப்பிற்கும், இரண்டு ஆசனங்கள் அரச கூட்டுக்கட்சிகளுக்கும் கிட்டி விடும் ஐந்தாவது ஆசனம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு கிடைக்கும் ஏனெனில் ஐந்தாவது ஆசனத்துக்கு போட்டியிடும் அளவில் மற்றைய இரு கட்சிகளிடமும் எஞ்சிய வாக்குகள் இல்லை.
வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 94644 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த தேர்தல்களினையும் அதில் மக்களது வாக்களிப்பு வீதத்தையும் கருத்தில் கொண்டால் இம்முறை கிட்டத்தட்ட அரைவாசியினர் வாக்களிக்க இடமுண்டு. இருப்பினும் 45000 பேர் இத்தேர்தலில் வாக்களிக்கின்றார்கள் எனக்கருதி தெரிவுசெய்யப்பட இருக்கும் ஆறு பிரதிநிதிகளில் எந்தக்கட்சி அதிக பிரதி நிதியைப்பெறப்போகின்றது என்பதை நோக்கினால் இம்மாவட்டத்தில் இம்முறை தமிழ்கூட்டமைப்பு 22500-23500 வாக்குகளை பெறலாம்.அரச கூட்டமைப்புக்கட்சி 15500-16500 இற்கிடையிலான வாக்குகளை பெறலாம். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 4000-4200 வாக்குகளைப்பெறலாம் ஐக்கியதேசிய கட்சி கிட்டத்தட்ட 2500 வாக்குகளை பெற வாய்ப்புண்டு.(இடம்பெயர்ந்த வாக்காளர்களும் சேர்த்துக் கணிக்கப்பட்டபின்னர்) எனவே இம்மாவட்டத்தில் தமிழ்கூட்டமைப்பு இலகுவாக மூன்று ஆசனங்களையும் அரச கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும். ஆறாவது எஞ்சியிருக்கும் ஆசனத்தை முஸ்லீம் காங்கிரஸ் பெறுமா அல்லது கூட்டமைப்பே பெறுமா என்பது போட்டியாக இருக்கும்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவைப்பொறுத்தவரை 53683பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றார்கள் எனினும் இவர்களில் 20 % இற்கு குறைவானவர்களே கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ளமை தரவுகளினூடாக அறியக்கிடைக்கின்றது. இடம்பெயர்வும் மக்களுக்கு தேர்தலை விடை தமது இருப்பிற்கு உள்ள சவால்களை சமாளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணமாக கருதப்படலாம்.
இம்முறை அந்த வாக்குகளை விட கணிசமான அளவு வாக்குகள் கூடுதலாக அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படினும் நிச்சயமாக என்னிக்கையைத் துணிய முடியாது.எனினும் எடுகோளாக ஒரு 25000 பேர் வாக்களிப்பார்கள் என வைத்துக்கொல்வோமெனில் 5 மாகான சபை உறுப்பினர்களை தெரிவுசெய்யும் இந்தபோட்டியில் தமிழ் கூட்டமைப்பானது முழு உறுப்பினர்களையும் தமதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. எதிர்த்து போட்டியிடும் அரச கூட்டமைப்பு 2000 முதல் 2500 வாக்குகளை பெறலாம் சிலவேளை அதனை விட குறைவாகவும் பெறலாம். ஆக இங்கு ஐந்து ஆசனங்கள் என வைத்துக்கொள்வோம். மொத்தத்தைக் கணக்கிட்டுப்பார்த்தால் தமிழ்கூட்டமைப்பு யாழில் 11/12, மன்னாரில் 2/3, வவுயாவில் 4/ 5 முல்லைத்தீவில் 5/5
மொத்தமாக 22/25 என்ற கணக்கில் அங்கத்தவர்களை பெறக்கூடியதாக இருக்கும். மன்னாரிலும் வவுனியாவிலும் இருக்கும் தொங்குகின்ற இரு ஆசனங்கழுமே நடைபெறவிருக்கின்ற மாகாணசபையின் அதிகாரத்தை அலங்கரிக்க இருக்கின்ற ஆசனங்களாகும். முஸ்லீம் கட்சிகள் இணைந்து கேட்டிருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தீர்மானிக்கும் தரப்பாக இருந்திருக்கலாம். இருப்பினும் இம்முறை முஸ்லீம் காங்கிரஸ் வென்றெடுக்க இருக்கும் இரண்டு ஆசனங்களும் தங்காசனங்களாக இருக்கும் என்று கூறமுடியும். ஏனெனில் தமிழ் கூட்டமைப்பு 2/3 பெரும்பான்மையுடனேயே அதிகாரங்களை நிறுவிக்கொள்வதற்கான சட்ட வரைபுகளை மாகாணசபையில் வரையும் அப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையெனில் அது முஸ்லீம் காங்கிரசில் தங்கியிருக்கும். ஆனால் இருபத்து நன்கு அல்லது இருபத்தைந்து ஆசனங்கள் கூட்டமைப்பிற்கு சென்றுவிடும் எனில் எது எல்லாம் எட்டாப்பழமாகவே இருக்கும்.
அரச கூட்டமைப்பில் போட்டியிடுபவர்கள் மத்தியில் முஸ்லீம்கள் சார்பாக எத்தனை அங்கத்தவர்கள் வரவிருக்கின்றார்கள் என்பது மக்களது கையிலேயே இருக்கின்றதுவிருப்பு வாக்குகளே இதனைத்தீர்மானிக்கும்.
கிளிநொச்சி மாவட்டம் எங்கே?
ReplyDeleteKOODAMAIPPUKKU 25,26 AASANANGKALUKU VAAIPPU UNDU 3/2 PERUNMPAANMAIYUM KIDAIKKUM KAARANAM TAMIL MAKKALIN IRUTHI KURAL ITHUVAAGUM....
ReplyDeleteYes, Where is Kilinochi??
ReplyDelete