Header Ads



உலக தீவிரவாதம்...!

ஹபீபுல்லா பைஸ்

(அரபு நூலை தழுவியது)

தீவிரவாதம் என்ற சொல் ஆரம்ப காலம் தொட்டே மக்கள் பாவனையில் இருந்து வந்த ஒரு சொல்லாகும். இந்த தீவிரவாதம் என்ற சொல்லுக்குள் பாதுகாப்பு அச்சுறுத்தல் , பொது உடமைகளை சேதப்படுத்தல் , பாமர மக்களை கொல்லல் இன்னும் இது போன்று உள்ளருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட ஒரு சொல்லாகும்.

இந்த தீவிரவாதி என்ற சொல்லுக்கு “குற்றவாளி” என்ற ஓர் அர்த்தத்தையும் கொடுக்க முடியும். தீவிரவாதம் என்ற சொல் ஆரம்ப காலம் தொட்டு இருந்து வந்தாலும் 2001 ல் தான் இந்த வார்த்தை மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் அடைகிறது அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது . அதாவது 2001 செப்டம்பரில் அமெரிக்காவின் வர்த்தக மையமும் , பாதுகாப்பு அமைச்சு கட்டடமும்  தாக்கப்பட்டது . இதை உலக ஊடகங்கள் அனைத்தும் ஒரே அணியில் நின்று இது தீவிரவாத தாக்குதல் என்று ஒருமித்து கூற தொடங்கின . இதனால் தான் மக்கள் மத்தியில் இந்த தீவிரவாதம் என்ற சொல் மிக பிரபல்யம் அடைந்தது.

இதையல்லாம் நோக்கும் போது நமக்கு ஒரு  கேள்வி எழும் அதாவது தீவிரவாதம் என்றால் என்ன ?  ஆனால் இந்த கேள்விக்கு இன்று வரைக்கும்  சரியான பதிலை யாராலும் கூற முடியவில்லை . இதற்கு ஒரே காரணம் இந்த தீவிரவாதம் என்ற சொல் ஒரு மட்டுபடுத்தப்பட்ட சொல் இல்லை என்பதே. இந்த தீவிரவாதம் என்ற செயற்பாட்டை கால அடிப்படையில் நோக்கினால்  எங்களுக்கு மற்றுமொரு கேள்வி எழும். அதாவது இந்த தீவிரவாதத்தித்கு சொந்தகாரர்கள் யார் ? என்பதே அந்த கேள்வியாகும் .

இன்னும் தெளிவாக சொன்னால் இந்த தீவிரவாதத்தித்கு சொந்தக்காரர்கள் யூதர்களா ? அல்லது கிறிஸ்தவர்களா ? அல்லது அராபியர்களா ? அல்லது சியோநிஸ்டுகளா? அல்லது பௌத்தர்களா ? என்பதே அந்த கேள்வியாகும். அல்லது தீவிரவாதம் என்பது ஒரு தனி மதமா ? அதாவது ஏதாவது ஒரு மதத்தித்கு தீவிரவாதம் என்ற ஒரு செயல் அல்லது சொல்  சொந்தமானதா ?

அல்லது இந்த தீவிரவாதம் மனித உணர்வோடு சம்பந்தப்பட்ட ஒன்றா ? அதனால் மக்கள் அதன் பக்கம் ஈர்க்க படுகிறார்களா ?

இப்படி பல கேள்விகள் எழும் .
எனவே இதல்லாம் நோக்கும் போது எமக்குள் ஒரு கேள்வி எழும் தீவிரவாதம் என்பதை எப்படி மட்டுப்படுத்தி மக்கள் மத்தியில் சமாதானத்தை உருவாக்க முடியும் ? என்பதே அந்த கேள்வியாகும் . இதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும் .

வரலாற்றில் நடந்த தீவிரவாத செயற்பாடுகள் :
வரலாற்று நெடுகிலும் நாம் பார்க்கும் போது பல தீவிரவாத செயட்பாடுகளை காணமுடியும் . இதை பின்வருமாறு அடையாளப்படுத்தி காட்ட முடியும் .
1.       சைத்தான் ஆதம் நபியின் மீது கொண்ட பொறாமை . இதன் காரணமாக அவரை சுவனத்தில் இருந்து வெளியேற்ற அவன் சதி செய்தான் . இறுதியில் வெற்றியும் அடைந்தான் . அதன் மூலம் அவன் சபிக்கப்பட்டான் . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
2.       காபில் என்ற ஆதம் நபியின் மகன் செய்த கொலை . திருமண காரணத்திற்காக தன் சகோதரனையே அவர் கொண்டார் . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
3.       நூஹு நபியவர்களை அவருடைய சமூகம் செய்த நோவினைகள் . அல்லாஹ்வின் பக்கம் அழைத்ததற்காக இந்த வேதனையை அவர்கள் அவருக்கு செய்தார்கள் . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
4.       இப்ராஹிம் நபியவர்களை அந்த சமூகம் நெருப்பில் போட்டது . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
5.       பல நபிமார்களை அந்தந்த சமூகம் ஊரை விட்டு துரத்தியது . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
6.       பல நபிமார்களை ஏற்றுக்கொண்ட மக்களை நெருப்பில் போட்டு வேதனை செய்ததும் , குழி தோண்டி புதைத்ததும் . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
7.       சகரிய்யா , யஹ்யா போன்ற நபிமார்களை கொலை செய்தல் . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
8.       ஈஸா நபியவர்களை கொலை செய்ய விரட்டி அவரை சிலுவையில் (ஆனால் அல்லாஹ் அவர்களை உயர்த்தி விட்டான் ) அறைந்தது . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான் .
9.       யமன் பிரதேசத்தில் இருந்து கஃபாவை உடைக்க ஒரு கூட்டம் வந்தது . ஆனால் அல்லாஹ் அதை பாதுகாத்து விட்டான் . இதுவும் ஒரு வித தீவிரவாத செயல்தான்.

இவைகள் அனைத்தும் முஹம்மது நபியவர்கள் நபியாக அனுப்பப்படுவதத்கு முன் நடந்த தீவிரவாத செயற்பாடுகளாகும் . எனினும் இதை விட பன்மடங்கு நபியவர்களின் காலத்திலும் , அதற்கு பின்னும் நடைபெற்றுள்ளன . குறிப்பாக எமது காலத்தில் நடைபெறும் தீவிரவாத செயற்பாடுகள் . இவைகளை ஒவ்வன்றாக தெரிந்து கொள்வோம் . 

No comments

Powered by Blogger.