அரசாங்கம் செய்த மாபெரும் அரசியல் தவறு - சம்பிக்க ரணவக்க
வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சந்தர்ப்பத்தை வழங்கியமை அரசாங்கம் செய்த மாபெரும் அரசியல் தவறாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஞ்ஞான, தொழில் நுட்பத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளதாவது,
13வது திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கி மற்றும் பாராளுமன்றத்தில் முக்கியமான பிரேரணைகளை கொண்டு வரும் போது மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெற வேண்டுமென்பதிலும் திருத்தங்களை கொண்டு வந்த பின்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறும் தெரிவித்தோம். ஆனால், அதனை அரசு மேற்கொள்ளாது வடமாகாண சபை தேர்தலை அறிவித்தது.
எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து வெளியேறினோம் இது எமது கட்சியின் முடிவு. வட மாகாண சபை தேர்தலை நடத்துவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முடிவு.
இன்று நாம் சொன்னது உண்மையாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தன்னாட்சி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட தனித் தமிழீழத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து விடயங்களையும் முன் வைத்துள்ளது.
அரசாங்கம் செய்த மாபெரும் அரசியல் தவறால் இன்று இனவாத, நாசிவாத சக்திக்கு அதிகாரம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு படையினர் அர்ப்பணிப்புடன் பெற்றுக் கொடுத்த வெற்றியை பின்னோக்கி நகர்த்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென தேசிய ரீதியான அமைப்புக்கள் வலியுறுத்திய போதும் சர்வதேசம் விசேடமாக இந்தியாவின் கடும் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் தேர்தலை நடத்துகின்றது. விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் தமிழ் மக்களின் அமைதியான வாழ்க்கையை குழப்பியது இந்தியாவே ஆகும்.

அறிவாளி பேசுவதைப்போல ஒரு போஸ் கொடுக்கலாம் என்றெண்ணி கொடுத்தது பாவம் மன நோயாளி போல இருக்கு.
ReplyDeleteசெய்தியை பார்கவே தேவையில்லை வாயத்திறந்தாலே அனைத்தும் சிறுபான்மையினரை அழிப்பதிலேயே குறி. வீணா நாம செய்திய பாத்து கடுப்பாகத்தேவையில்லை.
ரனீஸ்! நீங்க சொல்வது முற்றிலும் சரி! உண்மையிலேயே அவர் மனநோயாளிதான்
ReplyDelete