Header Ads



வெளிநாட்டுவாழ் பொத்துவில் மக்களிடத்தில் வேண்டுகோள்

(ஹாலு ஹம்தா)

பொத்துவில் மண்ணில் வாழும் ஏழை மக்கள் தங்கள் உறவினர்களின் ஜனாஸாவினை நல்லடக்கம் செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தூர இடங்களில் உள்ள வைத்திய சாலையில் நமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரின் ஜனாஸாவினை எடுத்துவருவதில் எதிர்நோக்குகின்ற சிரமங்களையும் மற்றும் ஜனாஸாவுடன் தொடர்புபட்ட பல்வேறு பிரச்சினைகளயும் கறுத்தில் எடுத்துக்கொண்ட சமூக சேவை விரும்பிகளால் பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏட்படுத்தப்பட்டு மிகவும் சிரப்பான முறையில் இயங்கி வருகின்றது.

 ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளை தேவைப்படுவோருக்கு வழங்குதல், இஸ்லாமிய முறைப்படி ஜனாஸாவினை குளிப்பாட்டுவதற்கும், கபனிடுவதற்கும் ஆண்கள், பெண்களுக்கு பயிற்றுவித்தல் மற்றும் விஷேட கருத்தரங்குகளை நடாத்துதல் போன்ற சேவைகளை வழங்கிவரும் குறித்த அமைப்பானது பொத்துவில் மக்களிடத்தில் பின்வரும் விடயங்களை எதிர்பார்கின்றது,
01.ஜனாஸா நலன்புரி அமைப்பில் அங்கம் வகித்தல்
02.உடல், அறிவு மற்றும் பொருலாதர ரீதியாக உதவி செய்தல்.
03.இளைஞர், யுவதிகளை ஊக்கப்படுத்தி அவர்களை இணைத்துக்கொள்ளுதல்
04.மற்றும் பல.
 தூர இடங்களிள் மரனிக்கும் பொத்துவில் மக்களின் ஜனாஸாக்களை எடுத்து வருவதற்கு தேவையான வாகனத்தினை கொள்வனவு செய்வதற்கு தங்களால் முடியுமான முயற்சிகளை மேற்கொள்ளும் வேளையில் வெளிநாடுகளில் வேலைபுரியும் பொத்துவில் மக்கள் தங்கலால் முடிந்த பண உதவியினை வழங்கி குறித்த வாகனத்தினை கொள்வனவு செய்வதற்கு உதவி செய்யுமாறு  பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பினர் வேண்டிக்கொள்கின்றது.

பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் கீழ் இணக்கப்பட்டுள்ள விண்னப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அணுப்பி வைக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

வங்கிக் கணக்கு இல:

Peoples Bank 
Pottuvil Branch 
AC NO: 164-1-001-60037566.

தலைவர்
ஆசிரியர் மெளலவி அஸீஸ் (ஷர்கீ)
செயளாலர்
ஏ.எம்.எம் மன்சூர்



2 comments:

  1. நீங்கள் ஜனாஸாவுக்காக சேமிக்கும் பணத்தை தூய்மய்யாநதாக சேகரியுங்கள்
    ஏனென்றால் அதிகமானவர்கள் முஸ்லிம் என்ற பெயரில் இருந்து கொண்டு ஹராமான வழியில் பணத்தை சம்பாதிக்கிரார்ர்கள் . உதாரணமாக வட்டி சம்மந்தப்பட்ட வங்கியில் வேளை செய்பவர்கள் இருக்கிறார்கள் ,வங்கியில் வாட்டி எடுப்பவர்கள் , லஞ்சம் எடுப்பவர்கள் ,ஒரு பெண்ணை கலியாணம் செய்வதற்காக சீதனம் என்ற பெயரில் சொத்துக்களை அபகரித்து அதில் தனது வாழ்க்கையை ஓட்டுபவர்கள் , மேலும் அல்லாஹ்வை தொழாமல் இருப்பவர்கள் , இப்படிப்பட்டவர்களிடமிருந்து பணம் வாங்குவதோ , ஏதும் உதவி பெறுவதோ இஸ்லாத்தில் ஹராமாகும் . மேலும் நீங்கள் தூய்மய்யானவர்களிடம் மட்டும்தான் வசூலிக்க வேண்டும் .பணத்தை கண்டதும் முக்கியமான இந்த விடயங்களை மறந்து விடக்கூடாது . மேலும் அல்லாஹ்வை அஞ்சி ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றும் மனிதர்களுக்கு மட்டும்தான் மரணத்தின் போது இந்த பணியை செய்ய வேண்டும் . ஏனென்றால் எவன் அல்லாஹ்வை தொழவில்லையோ அவனுக்கு இஸ்லாத்தில் பங்கு கிடையாது என்பது நாமரிந்த விடயமாகும் .மேலும் மேற்கூறப்பட்ட விடயங்களை பொத்துவில் மக்களுக்கு அறிவித்து தெளிவு படுத்த வேண்டும் .மேலும் நீங்கள் உங்கள் பணியில் தூய்மையானவர்களாக இருந்தால் தூய்மையானதை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் .(இது எனது மசூராவாகும் )

    ReplyDelete
  2. மக்களை மாத்திரம் நம்பிக்கொண்டிருக்காமல் நிருவாகத்தினர் வாருமானதிற்குரிய வழியினை ஏற்படுத்தி தூய்மையான முறையில் செயற்படுத்த வேண்டும் .

    ReplyDelete

Powered by Blogger.