சம்மாந்துறை ஜம்இய்யத்துல் குர்ஆனில் ஹக்கீம் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா
(ஏ.பி.எம். அஸ்ஹர்)
சம்மாந்துறை ஜம்இய்யத்துல் குர்ஆனில் ஹக்கீமின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை தஃலிகுல் இஸ்ஸாமிய கலாபீடத்தின் அதிபர் மௌலவி ஏ.எல்.அப்துல் றசீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.எச்.எம். சமீல், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. றபீக் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
Post a Comment