Header Ads



கம்யூட்டர் பார்ப்பவர்களின் கட்டாய கவனத்திற்கு..!

படிக்கிற குட்டீஸ் முதல் தாத்தா பாட்டி வரை இன்று கம்ப்யூட்டர் உபயோகிக்காத ஆட்களே இல்லை. விளையாட்டிலிருந்து பேச்சுத்துணைக்கு ஆளில்லாத குறை தீர்ப்பது வரை சகலத்துக்கும் கம்யூட்டரே. கம்யூட்டர் உபயோகிப்பதில் தவறில்லை. ஆனால் அதிகநேரம் கம்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு கம்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என்கிற பிரச்சனை வரும் என்கிறார் விழித்திரை சிறப்பு கிசிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

அதிக நேரம் கம்யூட்டர் உபயோகபடுத்துகிறவர்களுக்கு கண்கள் வறண்டு கண்ணீரே இல்லாமல் போகலாம். அடிக்கடி தலைவலி கண்கள் இழுக்கிற மாதிரி உணர்வு, கண்கள் துடிக்கிறது, எரிச்சல், பார்வை மங்கின மாதிரி உணர்வு.. இதெல்லாம் கம்யூட்டர் விஷன் சின்ரோமோட அறிகுறிகளா இருக்கலாம்.

சதா சர்வ காலமும் கம்யூட்டரே கதியா இருக்கிறவங்க, 20-20-20 விதியை பின்பற்றியே ஆகணும். அது என்ன 20-20-20 ன்னு கேக்குறீங்களா? அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 நொடிகளுக்கு, 20 அடி தொலைவுல உள்ள காட்சியை பார்க்கணும். உள்ளங்கைகளை சூடு பறக்கத் தேய்ச்சு, மூடின கண்கள் மேல வச்சு எடுக்கலாம். கண்கள் ரொம்ப வறண்டு போனா கண் மருத்துவரை பார்க்கணும்.

வறட்சியோட அளவை பொறுத்து தேவைப்பட்டா கண்களுக்கான செயற்கை கண்ணீர் மருந்துகளைப் பரிந்துரைப்பாங்க என்கிற டாக்டர் வசுமதி, கம்யூட்டர் வேலையில் சேர்வதற்கு முன்பே கண் பரிசோதனையை மேற்கொண்டு ஆலாசனை பெறுவது பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார். கிட்டப் பார்வையும் இல்லாம தூரப் பார்வையும் இல்லாம கம்யூட்டருக்கு நடுத்தர பார்வை தேவை.

கண்ணாடி தேவைப்படும் போது தூரப்பார்வைக்கும் கிட்டப் பார்வைக்குமான கண்ணாடி கம்யூட்டருக்கு சரியாக வராது. கம்யூட்டர் வேலைக்கான பிரத்யோக கண்ணாடிகள் இருக்கு. ஸ்பெஷல் கோட்டிங்கோட நடுத்தரப் பார்வைக்கான அதைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம். கம்யூட்டருக்கும், உங்களுக்குமான இடைவெளி சரியா இருக்கணும். பாதங்கள் தரையைத் தொடற மாதிரி உட்காரணும் 90 டிகிரி கோணத்துல உட்கார்றது சரியா இருக்கும்.

கம்யூட்டருக்கு ஆன்ட்டி ரெஃப்ளெக்ஷன் மானிட்டர் போடறதும் கண்களை பாதுகாக்கும். பொதுவா 40பிளஸ்ல இருக்கிறவங்களுக்கு, வெள்ளெழுத்தோட சேர்ந்து இந்த கம்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சனையும் வரும். அந்த வயசுல வரக்கூடிய பிரச்சனைய ஒதுக்காம கம்யூட்டர் விஷன் சின்ட்ரோமுக்கும் சோதனை செய்து, தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கிறது அவசியம் என்கிறார்..

No comments

Powered by Blogger.