காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 5 இலட்சம் ரூபாய் செலவில் மட்டக்களப்பு ஆரையம்பதி காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மத விவகார கலாசார சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் பிரதியமைச்சரும் அதன் பணிப்பாளர் நாயகமுமாகிய அஷ்ஷேய்க் அப்துல் கரீம் இப்றாஹீம் அல் றயீஸ் ஆகியோரினால் 26-09-2013திறந்து வைக்கப்பட்டது.
ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய அதிபர் ஸீத்தீக் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் சவூதி அரேபிய நாட்டின் சிறுபான்மை நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் அஷ்ஷேய்க் அஹமத் றூமி,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்; மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொறுப்பான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா,காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் ஜெஸீம் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சவூதி அரேபிய நாட்டின் இஸ்லாமிய மத விவகார கலாசார சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் பிரதியமைச்சரும் அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் அந்நாட்டின் சிறுபான்மை நாடுகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஆகியோரினால் பாடசாலை வளாகத்தில் மரம் நடுகை திட்டமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
Post a Comment