புனித மக்கா நகருக்கு குறிப்பிட்ட தூரம் நடந்தே செல்கின்றனர், தலதா மாளிகைக்கும் நடந்து செல்வதில் தவறில்லை ஜனாதிபதி மகிந்த
(JM.Hafeez)
புனித மக்கா நகருக்கு குறிப்பிட்ட தூரம் நடந்தே செல்கின்றனர். எனவே தலதா மாளிகைக்கும் நடந்து செல்வதில் தவறில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.
(18.9.2013 மாலை) கண்டி மத்திய சந்தை முன் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும தெரிவித்ததாவது,
இங்கு கூடியுள்ள எவரைப் பார்த்தாலும் இலக்கங்கங்களுடனேயே இருகின்றனர். ஓவ்வொருவரும் தமது ஆதரவாளர்களது இலக்கங்களை பாடமிட்டு வைத்துள்ளனர். 21ம் திகதி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று இலக்கங்களுக்கு மட்டும் புள்ளடிகளைப் போட்டு விட்டு வருவீர்களாயின்ன் உங்கள் வாக்குகள் செல்லுபடியற்றதாகி விடும். எனவே முதல் வேலையாக வேற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து அதன் பின்னே விருப்பு வாக்குகளுக்கு புள்ளடி இட வேண்டும். ஏனக்குத் தேவை வெற்றிலைக்கு வாக்களிப்பதே என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதாகக் கூறினேன். அதற்கான மக்கள் ஆணை எனக்குக் கிடைத்தது. சமாதானத்தை ஏற்படுத்தி இப்போது யுத்தம் இல்லை. அடுத் கட்டமாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதனை நாம் தற்போது கொண்டு போகிறோம்.
நாட்டின் அபிவிருத்திக்கு நெடுஞ்சாலைகள் அவசியம். எனவே நாம் அதனையும் மேற்கொணடுள்ளோம். நாம் பாதையை மூடுவதாகவும் வீடுகளை உடைப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். நாம் அப்படிச் செய்வதில்லை. மதுபாண சாலைகளை வேண்டுமானால் மூடுவோம் அது தவிர வேறு எதையும் மூடுவதில்லை.
எமது கண்டி ராஜ்யத்தின் இறுதி இராசதானியாகும். எனவே கண்டியை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. சகல வளங்களும் கொண்ட ஒரு நகரமாக கண்டியை அபிவிருத்தி செய்ய உள்ளோம்.
தலதா மாளிகை வீதியை மூடியுள்ளதாகக் கூறுகின்றனர். ஏன்னால் செய்ய முடியாதது எதுவுமில்லை. எனவே நினைத்தால் அதற்குப் பதிலாக நிலக் கீழ் சுரங்கப் பாதை ஒன்றை அமைக்கவும் முடியும். புனித மக்கா நகருக்கு குறிப்பிட்ட தூரம் நடந்தே செல்கின்றனர். எனவே தலதா மாளிகைக்கும் நடந்து செல்வதில் தவறில்லை. நானும் அங்கு நடந்துதான் செல்கிறேன் என்றார்.
தயவுடன் எழுத்துப் பிழைகளைச் சற்றுக் கவனிக்கவும்..
ReplyDeleteஎங்கு பார்த்தாலும் முஸ்லிம்களை பொறாமைக் கண் கொண்டுதான் பார்கிறார்கள்.
ReplyDeleteமுஸ்லிம்கள் அதிகமாக பள்ளியை தரிசிக்கிறார்கள், முஸ்லிம்களுக்கு நோன்பு காலங்களிலும் பாடசாலை மூடப்படுகிறது, இவ்வாறு சொல்லிக்கொண்டு வந்து, மக்காவையும் தலதா மாளிகையும் ஒன்றினைக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள்.
முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்காக எதையும் செய்வார்கள் என்பதைப் புரிந்துகொண்டார்களெனின், தலதா மாளிகைக்குப் போகும் பாதையா மூடியது போன்று அம்மாளிகையும் மூடிவிடுவார்கள்.
''என்னால் செய்ய முடியாதது எதுவுமில்லை''
அல்லாஹ் ஒரு நரம்பை இழுத்துவிட்டால், இவர்களால் என்ன செய்யமுடியும்????