Header Ads



புத்திர் சிலை வைக்கப்பட்ட காணி, மாணவர்கள் விளையாட அனுமதி


(அனா)

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் பிறைந்துரைச்சேனையில் உள்ள இரு பாடசாலைகளினதும் விளையாட்டு மைதான பிரச்சினை இன்று (17.09.2013) முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

பிறைந்தரைச்சேனை நூரிய்யா ஜூம்ஆ பள்ளி வாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் பிறைந்தரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் மற்றும் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் விகாரைக்குச் சென்று விகாராதிபதியிடம் எங்களது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு பாடசாலைக்கான விளையாட்டு மைதானத்தை விட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரோ விளையாடுவதற்கு அக்காணியை விட்டுத் தருவதாக பொருந்திக் கொண்டார். ஏற்கனவே விளையாட்டு மைதானமாக இருந்து வந்த காணி விகாரைக்கு சொந்தமான காணி என்று விகாரையின் விகாராதிபதியினால் கூறி வந்த நிலையில் இன்று மாணவர்கள் வந்து மைதானம் தேவை என்று கூறியதற்கிணங்க மாணவர்களின் நலன் கருதி மைதானத்திற்காக விகாரையின் காணியை விட்டுத் தருவதாக விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரோ உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி பூஜ நாவாநே அபயவன்ஸ லங்கார தேரோ கருத்துத் தெரிவிக்கையில் இப் பிரதேசத்தின் அரசியல்வாதியான அமீர் அலி என்னிடம் பலதடவை கெட்டுக் கொண்டதற்கிணங்கவும் மாணவர்களின் நலனுக்காகவும் இக் காணியை விட்டுத் தருகிறேன் என்று தெரிவித்தார்.

பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு காணியை விட்டுத் தந்ததற்காக ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதிக்கு பிறைந்துரைச்சேனை நூரிய்யா ஜூம்ஆ பள்ளி வாயல் நிருவாகத் தலைவர் கே.பதுர்தீன் மற்;றும் பாடசாலை மாணவர்களும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலம் என்பவற்றுக்கு உள்ள ஓரே விளையாட்டு மைதானமாகக் காணப்பட்ட விளையாட்டு மைதானம்  வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளது என்று விகாரையின் விகாராதிபதியினால் அடைக்கப்பட்டு மைதானத்தின் நடுவில் கடந்த 30.06.2013 இரவு புத்தர் சிலையும் வைக்கப்பட்டிருந்தது.

இக் காணி புத்தர் சிலைக்குறியது என்று விகாரையின் விகாராதிபதியினால் கடந்த 01.03.2010ம் திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக் காணி புத்த ஜயந்தி விகாரைக்குறிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக் கூடாது என்றும் கூறியதற்கிணங்க பாடசாலை நிறுவாகத்தால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு இது தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவனைகள் இடம் பெற்றதன் பின்னர் நீதி மன்றத்தால் விகாரைக்குறிய இடம் அல்ல என்றும் பாடசாலை மைதானம் என்று சுற்றிக் காட்டி 25.06.2013ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்குப் பின்னர் கடந்த 30.06.2013 மைதானத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலை நிருவாகத்தினால் வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கு இடம் பெற்று வருகின்றது.


No comments

Powered by Blogger.