இதற்கு என் முட்டாள்தனம்தான் காரணம்..!
தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவரும், அமைதிக்கானநோபல் பரிசு பெற்றவருமான முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) உடல்நலக் குறைவு காரணமாக பிரிடோரியா மருத்துவமனையில் கடந்த 87 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மருத்துவமனையில் இருந்து மண்டேலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், மண்டேலா இறந்து விட்டதாக பரபரப்பாக தகவல் வெளியானது. ஆனால், அவர் இறக்கவில்லை என்று தென் ஆப்ரிக்க அரசு அறிவித்தது.
மண்டேலா வீடு திரும்பினாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தென் ஆப்ரிக்க அதிபர் ஜாக்கோப் ஜுமா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாகவும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய அந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், புஷ்ஷின் தந்தையுமான சீனியர் புஷ் (95) தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி சேனலில் அவரது உதவியாளர் ஜிம் மெக்ராத் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மண்டேலா உயிருடன் இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கூறுவதா என எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து உடனடியாக டுவிட்டர் இணையதளத்தில் ஜிம் மெக்ராத் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்தியில், வாஷிங்டன் போஸ்ட் சேனலில் தவறுதலாக எனது கருத்து பதிவாகிவிட்டது. இதற்கு என் முட்டாள்தனம்தான் காரணம். யாருடைய மனதையாவது இது புண்படுத்தி இருந்தால் இதற்காக முழு மனதுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜிம் மெக்ராத் அவர்களே முட்டாள்தனம் என்பதை நீங்களாவது ஏற்றுக்கொண்டீர்களே நல்லது. உங்கள் புஷ் ஏற்றுக்கொள்ளமாட்டாரோ!!
ReplyDelete