Header Ads



சுதந்திர கட்சியிடம் மதவாத, இனவாத கொள்கை இல்லையென்பது பலருக்கு மறந்து போயுள்ளது

சிறிலங்கா சுதந்திர கட்சியிடம் மதவாத, இனவாத கொள்கைகள் இல்லை என்ற கொள்கை பலருக்கு மறந்து போயுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

திஹாரிய என்ற இடத்தில் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது எது நடந்தாலும் சிறிலங்கா சுதந்திர கட்சியை பொறுத்தவரையில் அனைத்து மதங்களுக்கும், இனங்களுக்கும் உரிய இடத்தை கொடுத்து, அந்த மதங்களையும் இனங்களையும் கௌரவப்படுத்துவதே முக்கிய கொள்கை.

பண்டாரநாயக்க குடும்பம் இனவாதத்தை தூண்டவில்லை அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் பண்டாரநாயக்க குடும்பம் 80 ஆண்டுகள் அரசியல் நடத்தியது. தேர்தல் தொகுதியில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன வன்முறைகள் வெடிக்கவில்லை.

மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ_.ஆர்.டி. பண்டாரநாயக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். எனினும் தற்போது அந்தக் கட்சிக்கு வேறு சிலர் உரிமை கோருகின்றனர்.

இன முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற ஓர் நிலைமை உருவாகியுள்ள இந்த நிலையில், சிலர் மத முரண்பாடுகளை தூண்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாட்டில் சில இனவாதத்தை தூண்டும் சந்தர்ப்பத்திலும் அரசாங்கமும் பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற காரணத்திற்காக எனது தந்தை தனிச் சிங்கள சட்டத்தை அறிமுகம் செய்யவில்லை. சிலர் இதனை பிழையாக அர்த்தப்படுத்துகின்றனர்   என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.