Header Ads



நாட்டிலுள்ள முஸ்லிம்களை அரசாங்கம் தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றது.

(vi) நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம் கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும் சம நீதி, சட்டங்களை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் முஸ்லிம்களுக்கு சட்டமும், நீதியும் செயற்படாது என்ற வகையிலான கருத்தினையே பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகள் கிடைக்கின்றது எனவும் அவரின் கருத்து அமையப்பெற்றுள்ளது.

இவ்வாறான கருத்துக்களினால் இலங்கையில் வாழும் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் விதமாக அமையப்பெற்றுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவின் இக்கருத்திற்கு அரசாங்கம் தெளிவான கருத்தொன்றினை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. first want to send this rubbish goda to the mental hospital. he should get treatment for dreaming unwanted. dear jaffnamuslim pls post my comments. don't do any silly by hiding it ok.

    ReplyDelete
  2. STILL WE ARE WAITING FROM THE HONORABLE MUSLIM MINISTOR'S STATEMENT. WHERE ARE THEY?

    ReplyDelete

Powered by Blogger.