இலங்கை வாழ் முஸ்லிம்கள் எவரும் பயங்கரவாதிகள் அல்லர் - பைசர் முஸ்தபா
இலங்கை வாழ் முஸ்லிம்கள் எவரும் பயங்கரவாதிகள் அல்லர் அதனை என்னால் உறுதிப்பட கூறமுடியும் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்தாபே ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
2013.09.20 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொடவினால் பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வ மத தலைவர்களது சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரை நிகழ்த்தும் போது, அடையாளப் படுத்தப்பட்ட குறித்த அமைப்பினைப் பற்றியே தான் கருத்துரைத்ததாகவும், முஸ்லிம் சமூகத்தை தான் ஒரு போதும் பயங்கரவாதிகள் என அடயாளப்படுத்த முனையவில்லை என்றும் விளக்கிய அவர், இதனை ஊடகங்கள் தவறாக பிரச்சாரம் செய்ததாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில், நகர அபிவிருத்தி திகார சபையினால் வதிவிடங்களை இழந்தவர்களுக்காக 60 இலட்சம் ரூபா செலவிலான 500 வீடுகள் தேமட்டகோடைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், அவை பாரபட்சமின்றி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் ஒற்றுமையாக வாழும் பல்லினத்தவர்களுக்கு மத்தியில் பிரிவினையை உருவாக்க முயலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு தீய சக்திகளின் விஷமத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க சர்வமத தலைவர்களைக் கொண்ட நல்லிணக்கத்துக்கான அமைப்பொன்றை நிறுவ இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.
இச் சந்திப்பில், பெளத்த நிகாயாக்களின் தேரர்கள், ஹிந்து மதத் தலைவர்கள், பாதிரிமார்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினர் மற்றும், முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா, தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றம் (UCNC) ஆகிய பொது அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதெல்லாம் வேல மெனக்கட்ட வேல. முடிந்தால் இந்த ராஜபக்ச அன் கோ வை பதவியில் இருந்து விரட்டுங்கோ. எல்லாம் சரியாக நடக்கும். நாடும் முன்னேறும் எல்லா இன மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள்.
ReplyDelete