Header Ads



போதைப் பொருள் திரவங்கள், பாராளுமன்றத்தில் உள்ள நான்கு, ஐந்து பேரால் இறக்குமதி

(Adt) கொழும்பிற்கு வரும் ஹெரோயின்களில் சில குருநாகலுக்கு அனுப்பப்படுவதாகவும், போதைப் பொருட்களால் கொழும்புக்கு ஏற்பட்டுள்ள தலையெழுத்து குருநாகலுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதைப் பொருட்களில் சில குருநாகலுக்கு அனுப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று 13-09-2013 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அண்மையில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட போதைப் பொருள் தயாரிக்கப்படும் திரவங்கள், பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் நான்கு, ஐந்து பேரால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலரின் செயற்பாடுகளால் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கௌரவமும் பாதிக்கப்படுவதாக எரான் விக்ரமரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற திட்டம் இங்கே செயற்படுகிறதா எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்தகால தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் அரச தரப்பில் உள்ளவர்களுக்கு, 90 வீத தொடர்பு இருப்பதாவும், எதிர்க்கட்சியினருக்கு குறைந்தளவு தொடர்பே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.