பாடசாலைகளுக்கு புகையிரத ஆணைச்சீட்டுப்புத்தகம் கிடைக்குமா..?
(கே.சி.எம்.அஸ்ஹர்)
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பெரும்பாலான பாடசாலைகளில் புகையிரத ஆணைச்சீட்டு முடிவடைந்துள்ளது.இதனை வலயக்கல்வி அலுவலகத்திடம் தொடர்பு கொண்டும் மீளவும் அதனைப்பெறமுடியாத நிலைமை உள்ளது.இவ் ஆணைச்சீட்டு அரச ஊழியர்களுக்குரிய ஒரு வரப்பிரசாதமாகும்.ஒரு அரச ஊழியருக்கு ஆண்டு ஒன்றிற்கு 03 சோடி(6 துண்டுகள்)வழங்கப்படும்.இதில் அரச ஊழியர் தனியாகவும் பயணிக்கலாம் அல்லது முழுக்குடும்ப உறுப்பினர்களுடனும் பயணம் செய்யலாம்.பெரும்பாலான அரச ஊழியர்கள் கொழும்பு போன்ற தூரப்பிரதேசங்களுக்குச் செல்வதற்கே அதிகம் ஆணைச்சீட்டுக்களைப் பயன்படுத்துகின்றனர்.

தற்போது பாடசாலைகளில் ஆணைச்சீட்டுகள் முடிவடைந்துள்ளமையால் ஆசிரியர்கள் அதனைப்பெறுவதற்காக கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கும்,வலயக்கல்வி அலுவலகங்களுக்கும் சென்றும் பெறமுடியாமல் அல்லல்படுவதை அவதானிக்கமுடிகிறது.சர்வதேச ஆசிரியர் தினம் எம்மை எதிர்கொள்ளவுள்ள இக்கால கட்டத்தில் இவ்வாறான அசௌகரியங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.இவ்விடயத்தில் கல்வி அமைச்சர் அவர்களும்,போக்குவரத்து அமைச்சர் அவர்களும் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டும்.
கல்வியமைச்சால் போக்குவரத்தமைச்சுக்கு வழங்கப்பட வேண்டிய ஆணைச்சீட்டுக்களுக்காக செலுத்தவேண்டிய நிதிகளை வருட இறுதியில் துரிதமாகச்செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,ஆணைச்சீட்டுப் புத்தகத் தட்டுப்பாட்டிற்குரிய சரியான காரணங்கள் கண்டறியப்பட்டு அவை தீர்க்கப்படவேண்டும்.இவ்விடயத்தில் ஆசிரியர் தொழிற்சங்கங்களும் தலையிட்டு விரைவில் பாடசாலைகளுக்கு ஆணைச்சீட்டு புத்தகங்களை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
Post a Comment