ரமழான் அறிவியல் வினா விடைப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு
புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் மாணவர்கள், இளைஞர்கள் ஆசிரியர்கள், வயோதிபர்கள் என பல தரப்பட்டோரை அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் பக்கம் ஆராயச் செய்யு நோக்குடன் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று நிகழ்வுகள், முஸ்லிம்களின் முக்கிய கண்டுபிடிப்புக்கள், உலக நாகரீகத்தின் முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் என முஸ்லிம் சமூகத்தின் சாதாரன மக்களை சென்றடையாத அறிவை வழங்கும் நோக்குடன் ஸஜியா ஊடகம் ரமலான் மாதத்தில் வினா விடைப் போட்டியொன்றை நடாத்தியது.
இவ்வினா விடைப் போட்டியில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்கள் வழங்கும் வைபவம் சென்ற 2013.09.08 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் குருநாகல் மாவட்டம் குளியாபிடிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பனாவிடிய முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதிகளாக இலங்கை உயர்கல்வி அமைச்சின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளரும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னால் பணிப்பாளருமான அஷ்-ஷெய்க் Y.L.M. நவவி, முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றின் தலைவர் N.M அமீன் அவர்களும் மேலும் பல கௌரவ அதீதிகளும் கலந்துகொண்டனர்.
இப் போட்டியில் முதல் பரிசாக ஒரு உம்ரா யாத்திரையை திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த M.M. ஜிப்ரி என்பவர் பெற்றுகொண்டார். இப் போட்டியை ஸஜியா அமைப்பின் ஊடகப் பிரிவான Sejiah Media Network ஆனது பனாவிடிய ஜாமிஉல் அஹதிய்யா பாடசாலையுடன் இணைந்து நடாத்தியது. ரமலான் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு வினா வீதம் முப்பது நாட்களிலும் மொத்தமாக முப்பது வினாக்கள் வெளியிடப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 5000 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வினாப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்து கொண்டிருந்தனர். நோன்பு முழுவதும் வெளியிடப்பட்ட முப்பது வினாக்கள் அடங்கிய வினாப் பத்திரம் மற்றும் விடை எழுதும் பத்திரம் என்பன அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
சிறந்ததொரு தலைமைத்துவம், திறமையான இளைஞர்கள் மற்றும் இலங்கையின் முக்கிய முஸ்லிம் தலைமைகளின் வழிகாட்டலுடன் இயங்கும் ஸஜியா அமைப்பு இலங்கையில் சிறந்ததொரு எதிர்கால முஸ்லிம் இளைஞர் சமுதாயமொன்றை உருவாக்கும் பணியில் பயணித்துக்கொண்டிக்கிறது. மேலும் ஸஜியா அமைப்பு தனது கல்விப் பிரிவு, ஊடகப் பிரிவு, அர்ப்பணிப்பு பிரிவு ஆகியவற்றின் மூலம் முஸ்லிம் சமுதயத்தின் முன்னேற்றத்தில் தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.
Post a Comment