Header Ads



பேயோட்டுவதற்கு முயன்ற இருவர் சடலங்களாக மீட்பு..!

(Tm) பேயோட்டுவதற்கு  முயன்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவமொன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. உளவியல் விஞ்ஞான ஆலோசகர் மற்றும் தனியார் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரின் சடலங்களே இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவ்விருவரும் ஹோமாகம, கிரிவத்துடுவே வீட்டினுள் குழியொன்றை தோன்றி அதற்குள் இறங்கி மண்ணால் மூடிக்கொண்டு பேயோட்டி தோஷத்தை கழித்துகொண்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளனர்.

பேயோட்டுவதற்கான ஆயத்தங்கள மற்றொரு ஆசிரியர் வீட்டில் வைத்தே நேற்று முன்தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்தன.

அந்த வீட்டில் வைத்து பேயையோட்டினால் வீட்டில் இருப்பவர்கள் இன்றேல் பேயையோடுபவர் இறந்துவிடலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஹோமாகமையிலுள்ள வீட்டொன்றில் வைத்து  நேற்றிரவு பேயோட்டப்பட்டது.

குழியை மூடியதன் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் குழியிலிருந்து ஊசியின் நுனி வெளியே வரும். அதன் பின்னர் குழியை தோண்டுமாறு ஆலோசனை வழங்கிவிட்டு இவ்விருவரும் குழிக்குள் இறங்கி குழியை மூடிகொண்டுள்ளனர்.

மூன்று மணித்தியாலங்கள் கழித்த பின்னரும் ஊசியின் நுனி வெளியே வராமையினால் அருகிலிருந்தவர்கள் குழியை தோண்டியுள்ளனர். இதன் போதே அவ்விருவரும் மரணமடைந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து பூனை மற்றும் கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2 comments:

  1. உளவியல் விஞ்ஞான ஆலோசகருக்கே இந்த அளவு மூளையா..??

    என்னவொரு மடப்பிறவிகளடா நீங்கள்.....???

    ReplyDelete
  2. ஏனைய்ய செய்தித்தாள்கள் ஒருவர்தான் இறந்துள்ளதாக கூறுகின்றன. இறந்த உளவியல் நிபுணர்தான் தனியார் வுகுப்பொன்ரைய்யும் நடாத்தி வந்துள்ளார். மூடநம்பிக்கை எவரையும் விட்டுவைக்கவில்லை அய்யா.

    ReplyDelete

Powered by Blogger.