Header Ads



கல்முனை மாநகர சபை முகாமைத்துவ உதவியாளருக்கு இடமாற்றம்


கல்முனை மாநகர சபையில் முகாமைத்துவ  உதவியாளராக  ஐந்து வருடங்களாக கடமையாற்றி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றலாகி சென்ற யு.முகம்மது இஸ்ஹாக்  அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் மாநகர முதவர் தலைமையில்  நேற்று 28 பிரியாவிடை வைபவம் நடை பெற்றது .

நீண்ட கால உள்ளூராட்சி சேவை அனுபவத்தை கொண்ட இஸ்ஹாக்  தனது அபிமானத்துக்கு உரியவர் என்றும்  எனது விசுவாசி என்றும் ஒப்படைக்கின்ற பணிகளை  உரிய நேரத்துக்குள் திருப்தியாக  செய்து முடிக்கும் ஆற்றலை கொண்டவர்  என்றும்  எனது அரசியலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்ற  சிறந்ததொரு ஊடகவியலாளர் என்றும்  மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார் . அவரது இடமாற்றத்தை இரத்து செய்ய கிழக்குமாகாண்  சபையில்  கடும் பிரயத்தனம் எடுத்தேன். எனினும் என்னுடன் அரசியல் காழ்புணர்ச்சி  கொண்ட ஒருசிலரால்  அது அரசியல் மயப்படுத்தப் பட்டு  ஐந்து வருடதுக்குமேல் ஒரே சேவை நிலயத்தில் தொடர்ந்து சேவையாற்ற முடியாதென்ற  நிலையில்  எனக்கு விருப்பமில்லாமலே  ஜனவரிக்கு செல்ல வேண்டியவரை ஏப்ரல்  வரை வைத்திருந்து அனுப்பினேன் என முதல்வர் தெரிவித்தார் 

அவர் இடமாற்றலாகி சென்றாலும்  என்னுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளார்   எனக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார் . இவரது சேவையை பாராட்டி  நடைபெற்ற  நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர்  ஜே.லியாகத் அலி ,கணக்காளர் எல்.ரீ சாலிதீன் ,நிருவாக அதிகாரி ஏ.அலாவுதீன்  உட்பட உத்தியோகத்தர் ஊழியகள் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.