Header Ads



சவுதி அரேபிய இளவரசி மீதான குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா கைவிட்டது

சவுதி அரேபிய இளவரசி மேசால் அலேபானுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா கைவிட்டுள்ளது. தமது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு, குறைந்த சம்பளத்தில் பணியாற்ற பணிக்கப்பட்டதாக கென்ய பணிபெண் ஒருவர் குற்றஞ்சாட்டியருந்தார்.

42 வயதான மேசால் அலேபானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த முடியவில்லை என கலிபோனியா மாநில அரச தரப்புச் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பணிப் பெண் அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கு போலியானது என அலேபானின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.