காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய மாணவிகளுக்கு கௌரவம் (படங்கள்)
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி மீரா பாலிகா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவி செல்வி எம்.எல்.எம்.நிபாஸத் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய 188 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும் அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற 25வது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டிலும் கலந்து கொண்ட குறித்த மாணவியை கௌரவிக்கும் முகமாகவும் 2012ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய 38மாணவிகளை கௌரவிக்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டும் ஊர்வலம் இன்று திங்கட்கிழமை 9-9-2013 காத்தான்குடி மீரா பாலிகா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
மீரா பாலிகா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை அபிவிருத்திக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு குறித்த பாடசாலை அதிபர் யூ.எல்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலம் பாடசாலை வளாகத்திலிருந்து பிரதான வீதியூடாக பழைய கல்முனை ஊர்வீதிக்கு சென்றடைந்து மீண்டும் பிரதான வீதியினூடாக பாசாலைக்கு வந்தடைந்தது.
இவ் ஊர்வலத்தில் மீரா பாலிகா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர்,உப அதிபர்,ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவிகளில் நாடளாவிய ரீதியில் 06மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு ஜப்பானில் நடைபெற்ற 25வது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்த அறுவரில் 188 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்ற செல்வி எம்.எல்.எம்.நிபாஸத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment