Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு விழா - வர்த்தக முகாமைத்துவ பீடம் சம்பியன்


(யு.கே.காலித்தீன்)

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பீடங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் இவ்வருட சம்பியன் பட்டத்தை வர்த்தக முகாமைத்துவ பீடம் சுவீகரித்தது.

விளையாட்டு விழா ஒலுவில் வளாக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி விளையாட்டு விழாவில் வர்த்தக முகாமைத்துவ பீடம் 213 புள்ளிகளைப் பெற்று இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது. கலை கலாசாரப் பீடம் 111 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பிரயோக விஞ்ஞான பீடம் 83 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் அரபு இஸ்லாமிய பீடம் 45  புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் , பொறியியல் பீடம் 26 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வில் கலை கலாச்சார பீட பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் , வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி ஜரீனா கபுர் , பிரயோக விஞ்ஞான பீட பதில் பீடாதிபதி கலாநிதி யு.எல்.செயினுதீன் , அரபு இஸ்லாமிய பீட பீடாதிபதி மௌலவி ஏ.பி.எம்.அலியார் , பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைதீன் , பொறியியல் பீட தலைவர் எம்.ஐ. இல்ஹாம் ஜெஸீல் , சிரேஸ்ட உதவி பதிவாளர் எம்.நௌபர் , விளையாட்டு ஆலோசனை சபை தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாறக் , உடற்கல்வித்துறை பொறுப்பாளர் எம்.எல்.ஏ.தாஹிர் , உடற்கல்வித்துறை போதனாசிரியர் .எம்.கடாபி உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , உத்தியோஸ்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.