இலங்கை ஹாஜிகளை ஏற்றிய சவுதி அரேபியன் முதலாவது விமானம் புறப்பட்டது - கேக் வெட்டப்பட்டது
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய சவுதி அரேபியன் முதலாவது பயணிகள் விமானம் சனிக்கிழமை 14-09-2013 இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயணமானது.
100 கும் மேற்பட்ட ஹாஜிகள் சனிக்கிழமை காலை பயணமானபோது அவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை காலை 9 மணிக்கு விமான நிலையத்தில் அமைச்சர் பௌசி தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் அமைச்சர் பௌசி சவுதியா விமானத்தின் விமான ஓட்டிகள் மற்றும் அதிகாரிகள் கேக் வெட்டிக் கொள்வதையும் படங்களில் காணலாம்.
Post a Comment