Header Ads



கனடாக்கு செல்வதற்கு உயிர் மரபணு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

இந்த வருட இறுதியில் இருந்து இலங்கையர் உட்பட்ட வெளிநாட்டவர்களிடம் இருந்து உயிர் மரபணு ஆவணங்களை கோருவதற்கு கனடா தீர்மானித்துள்ளது.

கனடாவில் இருந்து வெளியாகும் சிஸ்கொன் மீடியா இணையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கனடாவுக்கு பயணிக்கும் இலங்கையர்கள் ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் தமது கைவிரல் அடையாளம், மற்றும் புகைப்படங்களை விண்ணபத்தின் போது சமர்ப்பிப்பது அவசியமாகின்றது.

சுற்றுலா மற்றும் மாணவர் வீசா விண்ணப்பத்தின் போது இவை கட்டாயமாக்கப்படும்.

அத்துடன், இலங்கை உட்பட்ட நாடுகளின் பயணிகள் இந்த விண்ணப்பங்களின் போது, 85 டொலர்களை மேலதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கனடிய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. sfm

No comments

Powered by Blogger.