Header Ads



பிரச்சினை எங்கே இருக்கிறது..?

(ரபீக் முஹம்மது ஷாபி)

இம்முறை வடமேல்,மத்திய,வட மாகாண சபை தேர்தலில் எமது  முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் மேடை போட்டு பேசுகின்றனர். என்றாலும் எந்த ஒரு அரசியல் கட்சியின் மேடையிலும் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க செல்லுங்கள் என்று கூறவில்லை. ஏன் ?
உதாரணமாக சென்ற வடமேல் மாகாண சபை குருணாகல் மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகளை பார்த்தால் மொத்த முஸ்லிம் வாக்குகள் சுமார் 100000

ஐக்கிய தேசிய கட்சி + முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் 25000(பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 4 ) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் 14500 (பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 1 ) ஏனைய கட்சிகளுக்கு 500 அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகள் வெறும் 40000 ஏனைய 60000 முஸ்லிம் வாக்குகளிலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் மரணித்தவர்கள் என்று 20000 வாக்குகளை வைத்து விட்டு பார்த்தால்  எஞ்சியுள்ள 40000வாக்களர்களும் எங்கே போனார்கள் ?

(அவர்களும் வாக்களித்து இருந்தால் குருணாகல் மாவட்டத்தில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை இன்னும் மூன்று அதிகரித்திருக்கும்) எமது முஸ்லிம் வாக்காளர்கள் என்ன நினைத்தார்களோ, யார் வென்றாலும் எமக்கு பிரயோஜனம் இல்லை என வீடுகளில் ஒதுங்கிக் கொண்டார்களா? இல்லை அந்தந்த கட்சிக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விலகிப்போனார்கலா? இல்லை அல்லாஹ் தருவான் என்று சுருங்கி போனார்களா? தீர்வை அரசியல் வாதிகள் தேடவுமில்லை..... மக்கள் கவனிக்கவும் இல்லை.

ஆனால்...

பள்ளிகள் உடைக்கப்படுவது பற்றி அங்கலாய்க்கின்றோம். உரிமைகள் மிதிக்கப்படுகிறது என்று ஓலமிடுகின்றோம். முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்பதாக பகிரங்கமாக சொல்வதாக கர்ஜிக்கின்ன்றோம். இஸ்லாமிய  சரிஆ காட்டு மிராண்டி தனமான சட்டம் என்று கூறுபவர்களை கடிந்து கொள்கின்றோம். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று சொன்னவர்களை சாபாம் இடுகின்றோம். பிரச்சினை எங்கு இருக்கிறது என்று யாரும் பார்ப்பதில்லை.

வாக்காளர்கள் வீட்டிலே தூங்கிவிட்டு எங்களுக்காக பேச யாரும் இல்லையே என்று அரசியல்வாதிகளை திட்டி தீர்ப்பதில் பிரயோஜனமில்லை. இந்த நிலமை மாறவேண்டும். எமது முஸ்லிம் வாக்குகளின் பெறுமதியை முழு நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் காட்டவேண்டும். இதற்கான ஒரே வழி நமது முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் இயக்க வேறுபாடுகள் மறந்து போடப்பாடல் வேண்டும். அது எந்த கட்சியின் எந்த அபேட்சகருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அது உங்களின் சுதந்திரமான முடிவும் கூட.

ஆனால் அந்த அபேட்சகர் நிச்சயம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக இருக்க வேண்டும், அதிலும் சமூகத்தின் குரலாக என்றும் ஒலிக்க வேண்டும். இந்த கருத்து சில நேரம் துவேசக் கருத்து போன்று தோன்றலாம், அதுவல்ல எனது நோக்கம். பெரும்பான்மை சகோதரர்களுக்கு 1100000வாக்குகள் இருக்கின்றது.அனால் எமக்கோ வெறும் 100000 முஸ்லிம் வாக்குகள் மாத்திரம்தான் .இந்த எமது  100000 முஸ்லிம் வாக்குகளில் இருந்துதான் எல்லா கட்சிகளுக்கும் வாக்குகள் பிரிந்து போக வேண்டும்.இப்படி போனால் எமது வாக்குகள் வீனடிக்கப்படும் அபாயமும் எமது பிரதிநிகளின் எண்ணிக்கையில் குறைவும் ஏற்பட காரணமாக இருக்கும் என அஞ்சுகின்றேன்.

அதற்காக எங்கள் வாக்குகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படல் வேண்டும். எனவே இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் பள்ளிவாசல் ஊடாகவும்,மிம்பர் மேடைகள் ஊடாகவும் சமூகத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.இது ஒரு சமூகத்தின் கூட்டு பொறுப்பு. எனவே வருகின்ற 21 ஆம் திகதி முஸ்லிம்கள் அனைவரும் எமது உரிமைக்காக எமது வாக்குகள் அனைத்தையும் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று பயன்படுத்துவோம். அன்றைய தினம் எமது வேலைகளை சமூகத்தின் நன்மைக்காக சிறிது சுருக்கிக் கொள்வோம். எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.

(எந்த சமூகம் தங்களை தாங்களே மாற்றிக்கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை அல்லாஹ் மாற்ற மாட்டான்)

No comments

Powered by Blogger.