ஜப்பானில் கோரதாண்டவமாடிய சூறாவளி
கிழக்கு ஜப்பானை நேற்று கடுமையாகத் தாக்கிய சூறாவளி வீட்டுக்கூரைகளைக் கிழித்து சன்னல்களைச் சிதைத்தது. தோக்கியோவின் வடக்குப்பகுதி, யைடா போன்றவற்றில் வீடுகள் கனத்த சேதமடைந்திருந்ததை தொலைக்காட்சிப் பதிவு ஒன்று காட்டியது. ஆனால் யாருக்கும் காயங்கள் இல்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் சாலையில் போக்குவரத்து விளக்குகள் செயல்படவில்லை எனவும் தெரிகிறது. பொது மின்விநியோகக் கம்பங்கள் சாலையின் குறுக்கே விழுந்தன.
கோஷிகயா நகர், தோக்கியோ வின் வடமேற்கு ஆகியவை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி தாக்கியது. அப்போது 63 பேர் காயமுற்றதாகவும் கோஷிகயாவைச் சுற்றி சுமார் 110 வீடுகள் பலத்த பாதிப்புக்குட்பட்டதாகவும் தெரிகிறது. படம்: ஏபி
Post a Comment