தொழில்நுட்ப பாடநெறியை கற்பிக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்
கல்விப்பொதுத் தராதர உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள தொழில்நுட்ப பாடநெறியை கற்பிக்கும் நடவடிக்கை, நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலைகளில் நாளை 16-09-2013 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
14 ஆயிரம் மாணவர்கள் இந்த பாடநெறியை கற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப பாடநெறியை கற்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறைவு பெறும் சந்தர்ப்பத்தில், தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக செயலாளர் கூறினார்.
இந்த தொழில்நுட்ப பாடத்தை கற்பிப்பதற்கான பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களின் ஆசிரியர்களும் இதற்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
2016 ஆம் ஆண்டளவில் தொழில்நுட்ப கல்வியை கற்று, உயர்தரத்தில் சித்தியடையும் மாணவர்களுக்கு மேலதிக கல்வியை தொடருவதற்கு, பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்களை உள்ளடக்கிய பீடங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment