Header Ads



நாட்டு மக்களின் எண்ணங்களானது அரசாங்கத்தின் மீதே காணப்படுகிறது -

வாசுதேவ நாணாயக்கார
செயலாளர்
ஜனநாயக இடதுசாரி முன்னணி

மூன்று மாகாணங்களிலும் இடம்பெற்ற தேர்தலின் முடிவானது பொதுவாக வெளிப்படுத்துவது யாதெனில் நாட்டு மக்களின் எண்ணங்களானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மீதே காணப்படுகிறது என்பதாகும்.

பிரதான எதிர்கட்சியான ஏகாதிபத்திய வலதுசாரிகளினதும் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளின் சதவீதமும், ஆசனங்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியுற்று காணப்படுவதானது அவர்கள் மரணிக்கும் தருவாயில் உள்ளவை என்பதாகும்.

சரத் பொன்சேகா அவர்களின் தலைமையிலான ஜனநாயக கட்சியானது வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மூன்று ஆசனங்களை பெற்றுக்கொண்டமையினால் மக்கள் விடுதலை முன்னணி இடமற்றுப்போயுள்ளதானது விNஷட அம்சமாகும்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அமோக வெற்றியீற்றி இருப்பினும் வாக்குகளின் சதவீதத்தில் சிறு குறைவும், வடமேல் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவும் அவதாணிக்கக்கூடியதாக உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசும் இது குறிப்பிட்ட விடயத்தை ஒரு சைகையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வட மாகாணத்தில் சகல மாவட்டங்களிலும் தமிழ் கூட்டமைப்பானது 2ஃ3ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளமையின் மூலம் தெரிவாவது யாதெனில் அப்பிரதேசங்களில் தமிழ் தேசிய உணர்வானது அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமையாகும். கடந்த 3 வருடங்களாக அரசினால் செலவீனங்களை மேற்கொண்டு செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் இதற்கு முகம் கொடுக்க போதுமானதாக இல்லாமையானது தெளிவாகின்றது. 2011ல் இடம்பெற்ற உள்ளூர் ஆட்சி தேர்தலின் போது வடமாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையானது இம்முறை குறைவடைய காரணம் என்பதை நாம் உண்மையில் பரிசீலித்து பார்ப்பது அவசியமாகும்.

எது எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் செயற்படும் பிரிவினைவாத குழக்கள் அடிப்படைவாத குழுக்களுக்குமிடையிலுள்ள கொள்ளைகளுக்கு முரணாக மலையகத்தில் உழைக்கும் மக்களின் கருத்து பெரும்பான்மை சிங்கள சமூகங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே அதனடிப்படையில் அதிகமான பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான வாக்குகளை அளித்முள்ளமை பேரினவாத இனவாத குழுக்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. அத்துடன் யுத்தத்துக்கு பின்னே உள்ள காலத்தில் வட புலத்து மக்கள் சிங்கள மேலாதிக்கத்தின் அடிமைகள் என்ற மனோ நிலையிலிருந்து மாறுபட்ட நிலையில் சுதந்திரமான வாக்கெடுப்பின் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் பேரினவாதிகளின் இந்த பிழையான கருத்தை முறியடித்துள்ளனர். மேற்படி முடிவுகள் அரசின் சமூக பொருளாதார சீர்த்திருத்தங்கள் மூலமாக வடபுல மக்களுக்கு பலன்களை பெற்றுக்கொடுப்பது அரசின் பொறுப்பாகும். அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசுடன் இணைந்து செயற்படும் பங்காளிகளாக ஆக்குவதனை குறிக்கோளாக கொள்ள வேண்யுள்ளது. அதற்காக ஒன்றிணைந்த மத்திய அரசின் நிர்வாகத்தினால் தற்போது மாகாண சபைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ள அதிகாரங்களை வடக்கிற்கும் வழங்கி அம்மாகாண சபையுடன் ஒத்துழைத்து செயற்படும் ஆளுநர் ஒருவரை தெரிந்தெடுப்பது அவசியமாகும்.

இச்செயற்பாட்டினை வைத்து மாகாண சபைகளை சூனியமாக்குவதற்கு முயற்சிக்கும் சர்வதேச புலம்பெயர் தமிழர்களினூடாக பிரிதொரு பிரிவினவாதம் மீண்டும் எழக்கூடும் என எண்ண வேண்டியுள்ளது. இதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் சிங்கள தேசிய அடிப்படைவாதிகளால் வடக்கு மாகாண சபைக்கு விரோதமாக எதிர்ப்புக்களில் ஈடுப்பட்டுக்கொண்டுள்ளனர்.
இச்சூழ்நிலையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் வடக்கு மாகாண சபைக்கு பெரும்பான்மையாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளினதும் எதிர்கட்சியினதும் பொறுப்புக்களாக ஐக்கிய இலங்கையை ஏற்படுத்துவதற்கு அதிகாரங்களை பெற்றெடுக்கும் வளங்கள் செயற்பட வேண்டும் என்பதை நாம் அவதாணிக்கின்றோம்.

இந்த மாகாண சபைத் தேல்தலில் பொதுவான முடிவாக வெளிப்படுத்துவது சுதந்திர முன்னணி அரசின் கீழ் ஜனநாயகமானது செயற்படுவதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பானது இதனை புதியதோர் ஆரம்பமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.