Header Ads



அரசாங்கத்தைவிட்டு முஸ்லிம்களை தூரமாக்கும் முயற்சி வெற்றியளிக்காது - மஹிந்த

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான நட்புறவுச் சந்திப்பொன்று 08-09-2013 கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடிய சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றும்போது சகல இன மக்களுக்கும் சகல சமயங்களுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என்று கூறினார்.

இந்த அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம்களைத் தூரமாக்குவதற்கு சில சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன-  அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி- நிமல் சிறிபால டி சில்வா- மஹிந்தானந்த அளுத்கமகே- பிரதியமைச்சர் அப்துல் காதர்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.



2 comments:

  1. We Give All our Vote to you,,,, But first take proper action against BBS lead tugs who attacked many masjids around the country and those who insulted our religion especially in Kurunagal and Mahiyangana.

    We expect you to take proper action first before the election... Then you will see the votes of Muslims will keep you up.

    We need Action against racist BBS/RAWANA/HU ... not just this kind of talks only among muslim crowds.

    Peace willing SriLankan

    ReplyDelete
  2. முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் கட்சி என்பது இரண்டாம் பட்சம், நாங்களும் இந்நாட்டில் அமைதியாக, யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், சமாதானமாக வாழவே விரும்புகிறோம், எமது உரிமை, மார்க்க கடமைகளுக்கு இடையூறு இல்லாமல், எம்மையும் இந்நாட்டு மக்கள் எனவும் ஏனைய மதத்தவறுக்கு இருக்கும் சகல உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும் எந்த அரசாங்கம் தருகிறதோ அதுவே முஸ்லிம்கள் விரும்பும் அரசு, நிறம் பற்றி எமக்கு கவலையில்லை

    ReplyDelete

Powered by Blogger.