இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு அருகே தீப்பிடித்த படகு (படம்)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாடாளுமன்றம் அருகே திடீரென சுற்றுலா படகு ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 30 சுற்றுலா பயணிகளை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.இங்கிலாந்தின் லண்டன் நகரில் புகழ் பெற்ற தேம்ஸ் நதிக்கரையின் அருகில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நதியில் சுற்றுலா படகில் பயணிகள் சவாரி சென்று லண்டன் நகரை ரசிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று பகல் வழக்கம் போல் படகு ஒன்று 30 சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு தேம்ஸ் நதியின் மத்தியில் நாடாளுமன்றம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக படகில் இருந்து புகை வர தொடங்கியது.திடீரென தீப்பிடித்து படகு எரியத் தொடங்கியது. படகில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 சுற்றுலா பயணிகள் இருந்தனர். தீயை பார்த்து பயணிகள் அலறினர். அருகில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு சிலர் உயிரை காப்பாற்றி கொள்ள நதியில் குதித்தனர். அவர்கள் கரையேற முடியாமல் தத்தளித்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றொரு படகில் அங்கு விரைந்தனர். அதற்குள் தீ அணைக்கும் படகும் அங்கு சென்றது.
சுற்றுலா படகில் இருந்தவர்களையும், ஆற்றில் குதித்தவர்களையும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கீழே குதித்ததில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றபடி அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டு விட்டனர். இந்த படகு 2ம் உலக போரின் போது தயாரிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று மீட்பு படை அதிகாரி நீல் விதர்ஸ் கூறினார்.
Post a Comment