Header Ads



முஸ்லிம்கள் அரசியலில் தோல்வியுற்ற சமூகமாகவே உள்ளனர் - நாமல் ராஜபக்ஷ

(இக்பால் அலி)

முஸ்லிம்கள் நன்கு வியாபாரத்துறையில் மிகச் சிறப்பாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். ஆனால் அரசியல் துறையில் இன்னும் தெளிவு பெறாத நிலையில் தோல்வியுற்ற சமூகமாகவே உள்ளனர். இந்த ஜனாதிபதி நாட்டின் தலைவர், அதிக அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிபெறப் போவதும் ஆளும் பொது சன ஐக்கிய முன்னணிக் கட்சிதான். இந்த அரசாங்கம்தான் இன்னும் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்யப் போவகின்றது எனவே இந்நிலையில் தோல்வியடையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்களிப்பதில் எந்த விமோசனமுமில்லை. எனவே நன்கு திறன்படச் சிந்தித்து அரசாங்கத் தரப்பில்  போட்டியிடும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி ஒருவரைப் பெற்றி பெறச் செய்ய முன்வருமாறு  என்று அம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்கோள் விடுத்தார்.

பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் மதியாலைப் பிரதேசத்தில் பொது சன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை ஆதரித்த நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

30 வருட கால கொடூர யுத்தத்தில் முஸ்லிம்களுடைய வியாபார மற்றும் சமய நடவடிக்கைகள் என்பன பாரியளவு தடைபட்டுள்ளதை நாங்கள் நன்கு அறிவோம். யுத்த நிறைவுக்குப் பிற்பாடு தங்களுடைய வியாபார சமய விவகாரங்கள்  ந்வடிக்கைகைள் யாவும் சமூகமான முறையில் மிகவும் சிறப்பாகச் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கை பாரிய அபிவிருத்தி முன்னேற்றங்களைக் கண்டு வருகின்றன.  வெளி நாட்டு தீய சக்திகள்  இலங்கையில் இனங்களுடைக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு சதித் திட்டங்களை மேற்கொணடு வருகின்றன. சமயங்களுக்கிடையே மதவாதப் பிரச்சினைகளை உண்டு பண்ணி ஒற்றுமையாக வாழுகின்ற மக்களைப் பிரித்து நாட்டின் இஸ்தீரத்தன்மையை இல்லாமற் செய்வதற்கு  முயற்சிகள் மேற்கொள்கின்றார்கள்.  சிங்கள . தமிழ் , முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் இந்த ஒற்றுமையை சீர் குழைப்பதற்கு எமது நாட்டின் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போதும் இடமளிக்கப் போவதுமில்லை.

குருநாகல் மாவட்டத்தில்  ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழுகின்றனர். அவர்களுடைய தேவைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்தவற்கு உங்கள் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே வேட்பாளர் அப்துல் சத்தாரை வெற்றிபெறச் செய்வதன் மூலமே உங்களது பிரதேசங்களுடைய கல்வித் தேவைகளையும் கிராம அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் இந்திக பண்டார, குளியாப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் முஹமட் இர்பான், பிங்கரிய பிரதேச சபை உறுப்பினர் ரிசான், இப்பாகமவ பிரதேச சபை உறுப்பினர் பாஹீம் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

3 comments:

  1. சின்ன ஜனாதிபதி அவர்களே .......வெளிநாட்டு தீய சக்திகள் இங்கே உள்நாட்டில் மதங்களுக்கிடையில் குழப்பங்களை விளைவிக்கும்போது நீங்க விரலை சப்பிக்கொண்டு நித்திரை கொண்டிங்களா? நீங்க புலிகளை அழித்த பிறகு முஸ்லிம்களின் வாழ்வில் பாலும் தேனும் தான் ஆறாக ஓடுகிறது....அதென்றால் உண்மை தான் ......நீங்க தேர்தலில் வெற்றி பெற்றால் நமக்கு வயித்தாலயும் ஓடும்.....

    ReplyDelete
  2. நமது சமூகம் பட்டது போதும், தலைவர் முதலாவதும் இரண்டவதும் மூன்றாவதும் தாய் நாடே என்றவுடன் மனம் மகிழ்ந்தது.. ஆனால் காலம் போகவே அதனுடைய உள் அருத்தம் முஸ்லிம்களுக்கு வெளிச்சமாயிற்று... வெளிப்படையாகவே அரசங்கமே இன்வாத செயலுக்கு ஊக்கமளிக்கிற்தென்று தெறிஞ்சும் ஓட்டுப் பிச்சை கேட்கிறான்... வெக்கம் கெட்டவர்கள் இன்னும் நாம் இவர்களை நம்புவோமேயானால் நாம் அது எமது மார்க்கத்திற்குச் செய்யும் துரோகமாகவேயன்றி வேறில்லை.... எமது உரிமைகளை நாமே வென்றிடுவோம்.. பிற மதத்வர்களை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இரங்கிய கதிதான்...

    ReplyDelete
  3. ரெம்ப பழுத்த அரசியல்வாதி, அரசியலை கரைத்துக்குடித்துவிட்டு, உபதேசம் பண்ணுகிறார், எல்லோரும் கவனமாக கேட்டுக்கொள்ளுங்க, ஒற்றுமையாக வாழும் மக்களுகிடையில் துவேசத்தை ஏற்படுத்த வெளிநாட்டில் இருந்து ஒன்றும் IMPORT பண்ணதேவையில்லை உங்க குடும்ப நண்பர் ஞானசார போதும்

    ReplyDelete

Powered by Blogger.