சவுதி அரேபியாவிலிருந்து வந்த சடலம்..!
(Vi) சவுதி அரேபியா ஜித்தாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமானதாக தெரிவித்து அவரது சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தனது மகளுடைய மர்ம மரணம் தொடப்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையினைக் கண்டறிய வேண்டுமென மரணமான பெண்ணின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலிலுள்ள ஓமடியாமடுவைச் சேர்ந்த யோகேஸ்வரன் சாந்தி (வயது 24) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு தகவல் வழங்க்கப்பட்டு சடலம் நேற்று கொழும்பில் இருந்து சொந்த இடம் கொண்டுவரப்பட்டு இன்று அதனை நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர்.
இவர் கடந்த 4 வருடங்களாக சவுதி அரேபிய நாட்டில் ஜித்தா நகரில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இவரது தந்தை சீனித்தம்பி யோகேஸ்வரன் வயது (59) தெரிவிக்கையில்,
தனது மகள் சாந்தி 2009.10.10 இல் பணிப்பெண்ணாக சவுதியரேபியா சென்றார். அங்கு சென்று இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார். அதன் பின்பு எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை. எனது மகளைப் பற்றிய தகவல் அறிய பல்வேறு இடங்களிலும் முகவர்களின் மூலமாகவும் தொடர்பு கொண்டேன். பலன் எதுவும கிடைக்கவில்லை. இறுதியில் மகளின் சடலத்தையே காணமுடிகிறது.
இந் நிலையில் சவுதி நாடு சென்றது தொடக்கம் எதுவிதமான பணமும் எங்களுக்கு அனுப்பவும் இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும். காரணம் என்னிடம் சடலத்தை தரும்போது உமது மகள் நஞ்சருந்தி இறந்துள்ளாதாகவே சவுதியில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர் என்று கூறினர்.
ஆனால் இங்கு வந்து சடலத்தை பார்க்கும் போது முகப் பகுதி, மார்புப் பகுதி, கழுத்து பகுதி மற்றும் முழங்கால் பகுதிகளில் காயத் தளும்புகளும் அடி காயங்களும் காணப்படுகின்றன. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும். எனது மகளின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
அரசாங்கம் இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தை பணிக்க வேண்டும். வறுமை காரணமாகவே மகள் எனது அனுமதியின்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தார் என அவர் தெரிவித்தார்.

அரபு நாடுகளின் பணிப்பெண்களாக வேலை செய்யும் நமது நாட்டுப்பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவேண்டும். முடிந்தால் அனைவரும் திருப்பி நாட்டுக்கு அழைக்கப்பட்டு கைத்தொழில் வசதிகள் செய்து கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் எனெனில் பணிப்பெண்களாக சவுதி அரேபியா போன்ற நாடுகளின் வேலைசெய்யும் பெண்களின் கடந்த கால சமகால நிலைப்பாடு றிசான நபிக் தொடக்கும் இன்னும் எத்தனை கொலைகளும் சித்திரவதைகளும் நடந்துகொண்டிருக்கின்றன, இனிமேலும் பெண்கள் சவுதியைப்போன்ற காட்டு மிராண்டிகளின் நாட்டுக்கு அனுப்புவது தடைசெய்யப்படவேண்டும்.
ReplyDelete