Header Ads



ஈரான் ஜனாதிபதிக்கும், பாரக் ஒபாமாவுக்கும் தேனிலவு..!

ஈரானில் 1979 ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் அந்நாட்டிற்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஈரானின் அணுசக்தி உற்பத்தி குறித்தும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது ஈரான் அதிபராக ஹசன் ருஹானி பதவியேற்றதைத் தொடர்ந்து நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. 

இந்த வார ஆரம்பத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு ருஹானி தனது முதல் உரையை ஆற்றினார்.அப்போதே ருஹானி அமெரிக்க அதிபரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆயினும் இது சிக்கலான விஷயம் என்பதால் தவிர்க்கப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் பிரான்ஸ் தேசத்து அதிபர் ஹாலன்டேயையும் அவர் சந்தித்துப் பேசினார்.வியாழன் அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் சரிபும் ஆறு வருடங்களுக்குப்பின் நேரிடையாக சந்தித்து உரையாடினர். 

ஈரானின் அணுசக்தி குறித்த செயல்பாடுகளுக்கு நல்லதொரு தீர்வு காணப்படும் என்று அந்த சந்திப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னர், நேற்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், ஈரானின் அதிபர் ஹசன் ருஹானியும் தொலைபேசியில் உரையாடினர்.  

அமெரிக்க,ஈரான் வரலாற்றில் கடந்த ஆறு வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் உயர்ந்தபட்ச அரசியல் நிகழ்வு இதுவாக இருக்கும் இந்த உரையாடல் ஈரானின் அணுசக்தி பிரச்சினை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்த தீவிரத்தை வெளிப்படுத்தியது.

தான் நியூயார்க்கில் கூறியதை மீண்டும் ருஹானி வலியுறுத்தினார் என்று ஒபாமா குறிப்பிட்டார். ஈரானின் அணு சக்திப் பிரச்சினையைத் தீர்க்க நிறையத் தடைகள் இருந்தாலும் இதற்கு நல்லதொரு மாற்றுத் தீர்வு எட்ட கூடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  

இந்த உரையாடல் குறித்து ருஹானி வெளியிட்டுள்ள இணையதளச் செய்தியானது இரு தலைவர்களும் ஈரானின் அணுசக்தி உற்பத்தி தொடர்பான தங்களின் பரஸ்பர அரசியல் வெளிப்பாடுகளைத் தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.இறுதியில் ருஹானி இந்த நாள் இனிய நாளாக அமைய ஒபாமாவை வாழ்த்தியபோது அவர் நன்றி தெரிவித்ததாக முடிகின்றது.  

ஈரானின் அதிபராக ஹசன் ருஹானிக்கு அனைத்து அதிகாரங்களும் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஈரானின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் இறுதி முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அந்நாட்டின் இணையில்லாத் தலைவராகக் கருதப்படும் அயத்துல்லா அலி காமினியிடமே உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.