அக்கரைப்பற்று மாநகரசபைக்கு நவீன வளாகம்
(ஏ.ஜீ.ஏ.கபூர்)
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகரசபை நவீன வளாகம் திறந்து வைக்கும் வரலாற்று நிகழ்வு இன்று (29.09.2013) அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ள இவ் விழாவில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாநகரசபையின் நவீன வளாகத்தை திறந்து வைப்பார்.
அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாயல் முன்றலில் நடைபெறும் துஆப் பிரார்த்தனைத் தொடர்ந்து அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக அக்கரைப்பற்று- கல்முனை வீதியூடாக மாநகர நவீன வளாகம் வரை அழைத்துவரப்படுவார். அதனைத தொடர்ந்து நவீன வளாகத்தைத் திறந்து வைத்தபின் மாநரமேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் நடைபெறவுள்ள மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவார்.

இன்று (29.09.2013) அக்கரைப்பற்றில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள அக்கரைப்பற்று மா நகரசபை நவீன வளாகத்தின் அழகிய தோற்றம்.
Post a Comment