மூதூரில் 'றிசானா நபீக் பவுண்டேஷன்', இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு
(அபு அரிய்யா + மூதூர் முறாசில்)
சவுதி
அரேபியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்ட மூதூர்
றிசானா நபீக் ஞாபகார்த்தமாக இன்று காலை 10.30 மணியளவில் மூதூர் அந்நஹார்
மகளிர் ம. வி இல் 'றிசானா நபீக் பவுன்டேஷன்' எனும் பெயரில் அமைப்பொன்று
அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதோடு இவ்வமைப்புக்கான
உத்தியோகபூர்வமான இணையத் தளமொன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வறுமை
காரணமாக வெளிநாடு செல்லும் பெண்களைப் பாதுகாத்து அவர்கள் சிறந்த முறையில்
வாழ்வதற்கான வழிகாட்டலையும் உதவிகளையும் செய்யும் நோக்கில் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ள றிசானா நபீக் பவுண்டேஷனின் இன்றைய அங்குரார்ப்பண
நிகழ்வுக்கு அதன் தலைவரும் எஸ்.எப்.எம் அமைப்பின் தலைமை நிறைவேற்று
அதிகாரியுமான எம்.எம்.எம். மஹ்றூப் தலைமை தாங்கினார்.
மேலும்
இந்நிகழ்வில் றிசானாவின் பெற்றோர்கள், டொக்டர் ஹிபாயா இப்திகார், Asian
Tribune இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் கே.ஜே. ராஜசிங்கம், கிண்ணியா
ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ஹிதாயத்துல்லாஹ் (நளிமி) உட்பட பல உள்ளுர்,
வெளியூர் பிரமுகர்களும், இராணுவ அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது றிசானாவின் தாயாரால் இணையத்தளம் திறந்து
வைக்கப்பட்டதோடு, இவ்வமைப்பினால் இலங்கையின் வேறு பிரதேசங்களைச்
சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
மூன்று மாணவர்களுக்கு அவர்களது கல்வி மேம்பாட்டுக்குரிய புலமைப்
பரிசிலுக்கான நிதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
In Sha Allah , Allah will help to this organization to move with the good progress in its future.
ReplyDelete