Header Ads



உள்ளூராட்சி மன்றங்களின் செயல்திறனை மேம்படுத்தும் இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை


(அகமட் எஸ். முகைடீன்)

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இலக்ரோனிக் சிட்டிசன் றிபோட் காரடட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டை செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நான்கு நாள் வதிவிடப் பயிற்சி செயலமர்வு தம்புள்ள அமாயா லேக் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் இறுதி நாள் நிகழ்வு (03.09.2013) மாலை 7.30 மணியளவில் ஆசியா மன்றத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி தினேசா டீ சில்வா விக்ரமநாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுள்ளா, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்தன, விஷேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப், ஆசிய மன்றத்தின் பிரதிநிதிகள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடன் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயல்திட்டத்தின் கீழ் இலத்திரனியல் பிரஜைகள் அறிக்கை அட்டையினை நவீன தொழில்நுட்பத்தினை பிரயோகித்து நடைமுறைப்படுத்துவதக்கு வழிவகுக்கும் வகையில் மேற்படி  வதிவிட பயிற்சி செயலமர்வினை கிழக்கு மாகாண சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் உள்ளூராட்சி திணைக்கள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இது தென்கிழக்கு ஆசியாவிலே முதன் முதலாக அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே மேற்படி செயல்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது மேற்படி செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவலகங்களுக்கு “டெப்லட்ஸ்”களும் பயிலுனர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.