Header Ads



சஜித் பிரேமதாச இன்று முக்கிய தீர்மானத்தை அறிவிக்கிறார்..!

தென்மாகாண சபை தேர்தலுக்காக, தமது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வலியுறுத்தலை ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட ஒன்றியம் விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையில் இடம் பெற்ற ஒன்றுக் கூடலின் போது இந்த யோசனை தெவிநுவர தொகுதி அமைப்பாளர் எச்.ஆர்.பியசிறியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஏகமனதான அனுமதி கிடைக்க பெற்றதாக தென் மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சிறி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக sfm செய்தி பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டு வினவியது. அதற்கு பதிலளித்த அவர், தாம் இது தொடர்பில்  29-09-2013 அறிவிப்பதாக குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.