Header Ads



சீனாவில் ஊடகவியலாளர்களுக்கு கம்யூனிச கோட்பாட்டு பயிற்சி

சீனாவில், அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் அடங்கிய, ஊடகவியல் துறை சம்மந்தப்பட்ட பயிற்சி அளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவில், ஊடகங்களின் எண்ணிக்கை பெருகியதை அடுத்து, நாடு முழுவதும், மூன்று லட்சத்திற்கும் மேலான பத்திரிக்கையாளர்கள், ஊடகத் துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே. சீனாவில், பொதுமக்களிடையே இணையதளப் பயன்பாடு அதிகரித்து உள்ளதை அடுத்து, எலக்ட்ரானிக் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.

இதில், சற்றும் தணிக்கை செய்யப்படாத செய்திகள் வெளியிடப்படுவதாகவும், ஊடகங்கள் தங்கள், "ரேட்டிங்'கை அதிகரித்துக் கொள்ள, பரபரப்பான செய்திகளை வெளியிடுவதாகவும், சீன அரசு, குற்றம் சாட்டி உள்ளது. ஊடகத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள், ஊடகவியல் பற்றிய அடிப்படை அறிவைப் பெறாமல் இருப்பதும், சீனாவின் அடிப் படை கொள்கையான, கம்யூனிச கோட்பாடுகளைக் கற்றுக் கொள்ளாததுமே, இதற்குக் காரணம் என, அந்நாட்டு அரசு தெரி வித்து உள்ளது.

இதனால், சீனாவில் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும், கம்யூனிச கோட்பாடுகள் அடங்கிய ஊடகவியல் பற்றிய கல்வி வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. "கம்யூனிச கொள்கைகளை இளம் பத்திரிக்கையாளர்களிடம் விதைப் பதால், பொறுப்பு உணர்வுடன் பணியாற்றுவர்' என, சீன அரசு தெரிவித்து உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் மாதம் நாட்டின் முன்னணி பத்திரிக்கையாளர்கள், 400 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, வெவ்வேறு இடங்களில், பல்வேறு பத்திரிக்கையாளர்களுக்கும் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு, ஜனவரிக்குள்,மூன்று லட்சம் பத்திரிக்கையாளர்களுக்கும், கம்யூனிச சிந்தனை களுடன் கூடிய பயிற்சியை முடிக்க, சீன அரசு திட்டமிட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.