Header Ads



நடிகை கீதாவை பார்க்கும்போது திருமணம் செய்ய தோன்றுகிறது - அமைச்சர் மேர்வின்

அமைச்சர் மேர்வின் சில்வா மற்றுமொரு திருமண யோசனையை முன்வைத்துள்ளார். பிரபல சிங்களத் திரைப்பட நடிகையும் ஆளும் கட்சியின் அரசியல்வாதியுமான கீதா குமாரசிங்கவுக்கு அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேர்வின் சில்வா,

கீதாவை பார்க்கும் போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று தோன்றுகிறது. அவர் என்னை திருமணம் செய்திருந்தால், அவரது பெயர் கீதா குமாரசிங்க என்பதற்கு பதிலாக கீதா சில்வா என்று மாறியிருக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்த தேர்தல் கூட்டத்தில் கீதா குமாரசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். அமைச்சர் மேர்வின் சில்வா பேச்சை முடித்து விட்டு மேடையில் இருந்து இறங்கும் போது பேசிய கீதா,

“உங்களுக்கு அந்த காலத்தில் கதாநாயகனாக வேண்டும் என்ற பைத்தியம் இருந்தது என்பது எனக்கும் நினைவிருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தால் திருமணம் செய்வது பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கலாம்” என்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த வேளையிலும் மேர்வின் சில்வா திருமணம் செய்யும் அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


වයඹ පළාත් සභා සන්ධාන අපේක්‍ක්‍ෂ ජොහාන් ප‍්‍රනාන්දුට සහය පළ කිරීම සඳහා නිකවැරටියේ පැවති රැස්වීමකදී අමාත්‍ය මර්වින් සිල්වා තවත් විවාහ යෝජනාවක් කලේය. ඒ ගීතා කුමාරසිංහ මහත්මියටයි.
‘මට ගීතව දැක්කම තාම බදින්න හිතෙනවා.එදා ගීතව මම බැන්දානම් ගීතා කුමාරසිංහ නෙවෙයි ගීතා සිල්වා වෙනවා’ යයි අමාත්‍යවරයා පැවසීය.
”මම කිසිම කෙනෙකුගේ වේදිකාවට නැග්ගේ නෑ උදවු කරන්න. ඒත් මම ජොහාන්ට උදවු කරනවා. ඒ ජොන්ස්ටන් ජනාධිපතිතුමා රකින නිසා. ජොහාන් අංක එකට එනවා. ජොහාන්ට මහ ඇමතිකම නොදුන්නොත් මම ජොහාන්ට මහ ඇමතිකම අරන් දෙන්න උපවාස කරනවා.”යැයිද මර්වින්සිල්වා මහතා වැඩිදුරටත් එහිදී පැවසීය.
කෙසේ වෙතත් ගීතා කුමාරසිංහද මර්වින් සිල්වා ඇමතිවරයා වේදිකාවෙන් බැස යද්දී ‘මට මතකයි ඔබතුමාට ඒ කාලේ නළු පිස්සුවක් ගහල තිබුණා. අපරාදේ තව අවුරුදු විස්සකට කලින්වත් කිව්වා නම් බදින එක ගැන සලකා බලන්න තිබුණා’ යයි පවසා තිබේ.

5 comments:

  1. TAMIL NAADDU ARASIYAL VAATHIKALAI ARASIYAL KOMAALIKAL ENRU SOOLLIYAVARKAL INRU ARASIYAL KOMAALIKALAAGI VIDDANAR..

    ReplyDelete
  2. இந்தக் கல்யாண ராமனுக்கு 'மஹிந்த சிந்தனை'யில் ஒரு முடிவே இல்லையா?

    இந்த நாட்டுக் குடிமகன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது.

    அண்மையில் ஒரு வெளிநாட்டில் எமது நாட்டுச் சகோதரர் தன்னை 'ஸ்ரீலங்கன்' என அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அந்த வெளிநாட்டுக்காரர், 'ஓ.. நீங்கள் அந்த கல்யாண ஆசை கொண்ட அமைச்சருடைய நாட்டவரா?' என்று திருப்பிக் கேட்டதாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

    பகிரங்க மேடையில் அந்தப் பெண்ணையும் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் மேர்வின் தனது ஆசையை வெளிப்படுத்தியதை அவரது சொந்த மனைவி அறியவில்லையா? அல்லது அறிந்தும் 'கழுதை எக்கேடாயினும் கெட்டுப் போகட்டும்' என்ற பாணியில் பேசாமல் தன்பாட்டில் இருக்கிறாரா?

    சே.. அடிக்கடி இவ்வாறான மேர்வினது கருத்துக்களைக் கேள்வியுறுவது வயது வந்த பிள்ளைகளையுடைய எமக்கே அருவருப்பாக இருக்கிறது. இவரையெல்லாம் தனது அமைச்சரவைக் குடும்ப உறுப்பினராகக் கொண்டிருக்கும் நாட்டின் தலைவருக்கும், சக அமைச்சர்களுக்கும் முசுப்பாத்தியாக இருக்கிறதோ....?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. அமைச்சருக்கு யாரோ வியாகரா கொடுத்துவிட்டார்கள் போல், அதுதான் , மன்மத லீலையில் வென்றோர் உண்டோ என்று கண்ட நிண்ட இடமெல்லாம் பாடிதிரிஹிறார் .

    ReplyDelete
  4. கீதாவிடம் ..................மன்னிப்புக்கோரும் போலும்?.மோகினிப்பிசாசு என்ற பைத்தியம் பிடித்திருக்கும் போல.

    ReplyDelete
  5. we are expecting usefull news.

    ReplyDelete

Powered by Blogger.