வவுனியாவில் நீர் வழங்கல் திட்டம்
(அனா)
மஹிந்த சிந்தனையில் சுத்தமான குடி நீரை மக்களுக்கு வழங்கும் திட்டத்தில் வவுனியா நீர் வழங்கல் திட்டம் நேற்று (12.09.2013) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தினதும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் 5800 மில்லியன் ரூபா நிதியளிப்பில் அமையப் பெறவுள்ள இவ் குடி நீர் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்தி பத்தாயிரம் மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்கப்படவுள்ளது.
சாஸ்திரி கூழாங்குளத்தில் இருந்து நாளொன்றுக்கு பணிரெண்டாயிரம் கன மீற்றர் நீரை சுத்திகரிக்கக்கூடிய நீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்து 21 கிலோ மீற்றர் நீளமான பிரதான நீர் பரிமாற்றக் குழாய் அமைக்கப்படவுள்ளதுடன் 225 கிலோ மீற்றர் நீளமான வினியோகக் குழாயும் அமைக்கப்பட்டு நெளுக்குளம் மரக்காரம்பளை பூந்தோட்டம் ஆகிய இடங்களில் நீர் தாங்கிகள் அமைக்கப்பட்டு வவுனியா நகரத்திற்கும் நெளுக்குளம், மடுகந்தை, ஈரற்பெரிய குளம், மற்றும் சாஸ்திரி கூழாங்குளம் பகுதிகளுக்கும் குடி நீர் வழங்கப்படவுள்ளது.
குடி நீர் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர், வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சுமதிபால, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நீர் வழங்கள் அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment