Header Ads



அபுதாபியில் இலங்கையர் வபாத்

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மாரடைப்பினால் இலங்கையை காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் டுபாய் அபுதாபியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மரணித்துள்ளார்.

சுமார் 05வருடங்களுக்கு தொழில் நிமித்தம் டுபாய் அபுதாபி நகருக்குச் சென்ற நெய்னா முஹம்மது நாஸர்(வயது 43) அண்மைக்காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறிருக்கையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சுகயீனம் ஏற்பட்டு அபுதாபி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மாரடைப்பினால் இவர் மரணித்துள்ளார்.

மட்டக்களப்பு காங்கேயனோடைப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் காத்தான்குடி விடுதி வீதி 3ம் குறுக்கு லேனில் திருமணம் முடித்துள்ளதுடன் இரு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.



 

1 comment:

  1. இன்னாளில்லாஹி வஇன்னா இழைகி ராஜிஊன்

    ReplyDelete

Powered by Blogger.