வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி முஸ்லீம்களுக்கு வழங்கப்படுமா..?
(F.SIHAN)
வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இதுவரை எமது கட்சி சார்பில் எவரையும் சிபார்சு செய்யவில்லை என அகில இலங்கை மக்கள் மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வை.எல்.எம் ஹமீட் தெரிவித்தார். தற்போது வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் யாருக்கு வழங்குவது என்ற பிரச்சினை எமுந்துள்ள நிலையில் இது தொடர்பாக கேடட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இப்பதவி குறித்து ஏனைய கட்சி பிரதிநிகளிடம் பனிப்போர் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக ஜனாதிபதி ஜெனிவா இருந்து நாடு திரும்பியதும் தமது கட்சி எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும்.வட மாகாண சபைல் 3 ஆசனங்களை எமது கட்சி பெற்றுள்ளது. இதர கட்சிகள் தலா இவ்விரண்டு ஆசனங்களை பெற்றுள்ளன.
மேலும் வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அப்பிரதேச முஸ்லீம் மக்கள் உள்ளதாக அறியமுடிகிறது. ஆனால் தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 7 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எனினும் இதில் ஈபிடிபிக்கு யாழ்ப்பாணத்தில் ஒன்றும் கிளிநொச்சியில் ஒன்றுமாக இரண்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வவுனியாவில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் ஒன்று என இரு ஆசனங்களைப் பெற்றுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முல்லைத்தீவு , வவுனியா மற்றும் மன்னாரில் தலா 1 ஆசனங்களை வென்றுள்ளது.
இந்த வகையில் பார்க்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அதிக ஆசனங்களை வென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கே வழங்க வேண்டும என தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் தமது பிரதிநிதிiயை இப்பதவிக்கு நியமிக்க வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
டக்ளஸின் கோஷம்.. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி!
ReplyDeleteறிஷாத்தின் கேஷம்... மத்தியில் ஆளுங்கட்சி, மாநிலத்தில் எதிர்க்கட்சி.!!
சபாஷ்.. ஆளுங்கட்சிக்குள் அருமையான போட்டி!!!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-