தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேடையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
வடமாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 15.09.2013 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் மன்னார் மாவட்டம் முத்தரிப்பில் நடைபெற்றது.
பெருமளவு தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொண்ட மேற்படி கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான மாவை சேனாதிராஜா (பா.உ), செல்வம் அடைக்கலநாதன் (பா.உ), வினோ விநோதரலிங்கம் (பா.உ), ஸ்ரீ காந்தா ஆகியோரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலமையிலான கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நஜா முஹம்மத் இஸ்லாஹி மற்றும் வட மாகாண சபையின் ஆளும் கட்சியாக வரும் என பரவலாக எதிர்பார்க்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரான அய்யூப் அஸ்மின் நளீமி ஆகியோரும் உரையாற்றினார்கள்.
மன்னார் கோட்டை மன்னர்களுக்கு வயிற்றைக் கலக்கும் காட்சி!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-