போலி வீடியோவை பரப்பி கலவரத்தை அதிகரிக்க இந்து தீவிரவாதிகள் சதி
இந்தியா - உத்தர பிரதேசத்தில் வெடித்துள்ள பயங்கர கலவரத்தின் பின்னணியில் போலி காணொளியை பரப்பிய இந்து தீவிரவாதிகள் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி. யில் முஸ்லிம் இந்து சமூகத்தினரிடையே பயங்கர கலவரம் வெடித்து. இதில் சுமார் 21 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் போலி காணொளி ஒன்றை பரப்பி கலவரத்தை மேலும் அதிகரிக்க பாஜக வினரும் இந்துத்துவாவினரும் செயல்பட்டு வருகின்றனர். அதாவது பாரம்பரிய முஸ்லிம் அடையாளத்தைக் கொண்ட சிலர் இரண்டு இளைஞர்களை கொலைச் செய்வது போன்ற காட்சி அந்த காணொளியில் அடங்கியுள்ளது. ஆனால், இந்த வீடியோவில் இடம் பெற்ற சம்பவம் 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவமாகும். இதனை எடிட் செய்து கலவரத்தை பரவச் செய்ய ஹிந்துத்துவா சக்திகள் பயன்படுத்தியுள்ளனர்.
இவர்கள் பரப்பிய காணொளிக்கு ஆதாரமாக ’தைனிக் ஜாகரன்’ பத்திரிக்கை வெளியிட்ட ‘ஸ்கிரின் சாட்டை’ ஆதாரமாக இணைத்து அந்த போலி காணொளியின் பரப்புரையை மிக தீவிரமாக செயலாற்றி இருக்கிறார்கள்.

பிரச்சனை மிக தீவிரமாகி கொண்டு இருக்கிறது என்பதனை உணர்ந்த காவல் துறையினர் அந்த போலி காணொளியை இணையத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.அதனை தொடர்ந்து அந்த போலி காணொளியை பரப்புரை செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்பட 229 பேர்களுக்கு எதிராக வழக்கு பதிவும் செய்யப்பட்டு இருக்கிறது.
போலியான காணொளி தயாரித்தல்,இன கலவரத்தை தூண்டுதல்,சதி திட்டங்கள் தீட்டல் ஆகிய பிரிவுகளிலும், ‘ஐ.டி’ பிரிவுகளை உள்ளடக்கியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
எனினும் தடை செய்யப்பட்ட இந்த காணொளியை 'முஸாஃபர் நகரில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’ என்ற தலைப்பில் இணையதளம், ப்ளூட் டூத் வழியாக காட்டுத்தீ போல. உள்ளூர் பா.ஜ.க எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள் பரப்பியுள்ளனர். மீரட் மாவட்டம் சர்தானா தொகுதி எம்.எல்.ஏ தாக்கூர் சிங்கித் சிங், தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து 500 பேர் அவருடைய வீடியோவை ஷேர் செய்துள்ளனர். Inne
Post a Comment