Header Ads



ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு பாராட்டு

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான இலங்கையின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும், ஐக்கிய அரபு இராச்சிய வெளிவிவகார அமைச்சர் சேக் அப்துல்லா பின் ஸயிட் அல் நெயானிற்கும் இடையில் டுபாயில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் சுமார் இருபது நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்து சமுத்திர பிராந்திய வலயத்தின் கடற் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கைக் கடற்படையினர் வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என ஐக்கிய அரபு இராச்சிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. gtn

No comments

Powered by Blogger.