அஹ்சன் எழுதிய விழியோரத்துளிகள்
(சுலைமான் றாபி)
நிந்தவூர் விளையாட்டு வர்ணனையாளர்கள் சம்மேளனத்தின் அமைப்பாளரும், அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் க.பொ.த. (உ/த) மாணவருமான எம்.ஐ.எம்.அஹ்சன் எழுதிய விழியோரத்துளிகள் கவிதை நூல் வெளியிட்டு 11-09-2013 வைக்கப்பட்டது.
கவிஞர் யு.எல். ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கவிஞர் கலாபூஷணம் ஏ. பீர் மொஹமட், ஊடகவியலாளரும் கவிஞருமான ஜெசி எம் மூசா, நிந்தவூர் கலை இலக்கிய வட்டப் பேரவையின் தலைவர் வைத்தியர் ஏ.எம். ஜாபிர், செயலாளர் பொறியியலாளர் ஏ.இஸ்மாயில், கவிஞர் ஹசன் மௌலானா மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வினை அறிவிப்பாளர் கே.எம். பாரிஸ் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment