செவிடன் காதில் சங்கு ஊதிய...!
(ஜெமீல்)
அட்டானைச்சேனை மக்கள் வங்கி முன் வீதி, குண்டும் குழியுமாகமாக உள்ளது. மழை காலம் வந்துவிட்டால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து செய்வது மிகவும் கஷ்டம். வீதியில் தேங்கி நிக்கும் நீர் வற்ற பல மாதம் செல்லும்.
இதுசம்மந்தமாக மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் நசீர், பிரதேச சபை தவிசாளர் அன்சில் ஆகியோருக்கு பல தடவை இப்பகுதி மக்கள் கையப்பமிட்டு கடிதம் கொடுத்தும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதை போல் உள்ளது. மேல் குறிப்பிட்ட அரசியல்வாதிகள் நேரில் வந்து இவ்விதியை பார்வையிட்டு புனரமைப்பு செய்து தருவதாக கூறி பல வருடம் ஆகின்றது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே அரசியல்வாதிகள் இந்த வீதியை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையிட்டு புரதொட்ட மக்கள் அட்டானைசேனை அரசியல்வாதிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
Post a Comment