Header Ads



வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது யார் என்பதனை சிந்திக்கவேண்டும் - பஸில்

முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது யார் என்பதனை சிந்திக்கவேண்டும். தற்போது கூட வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாகவே செயற்பட்டுவருகின்றது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபைத் தேர்தல் ஒன்றுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற கொள்கைப் பிரடகனம் ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. வடக்கு மக்களின் தேவையை புறக்கணித்து சர்வதேச மட்டத்தில் ஒரு சில தரப்புக்களின் தேவையை நிறைவேற்றும் நோக்கிலேயே கொள்ளைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தவே தமிழ்க் கூட்டமைப்பு முயற்சித்துள்ளது.

வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தை குறைக்க முடியாது. அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. பாராளுமன்றத்துக்குக் கூட அந்த அது தொடர்பான அதிகாரம் கிடையாது.

உண்மையில் வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றுவதாயின் கல்வி சுகாதாரம் பொருளாதார அபிவிருத்தி வீடு போக்குவரத்து மின்சாரம் பல்கலைக்கழக வசதி உள்ளிட்ட விடயங்களையே முன்வைக்கவேண்டும். அதனைவிடுத்து வடக்கில் இராணுவத்தை குறைக்கப்போவதாக பிரகடனத்தில் கூறியுள்ளனர். மாகாண சபையினால் எதனை செய்ய முடியும் எதனைய செய்ய முடியாது என்ற விபரமும் இவர்களுக்கு தெரியவில்லை.

2 comments:

  1. இவ்வளவு நாளும் வாய் மூடி சொத்து சேர்ப்பதில் இருந்தவர்களெல்லாம். இப்போது சாத்தான் வேதம் ஓதுவது போல பிரிவினைவாதம் ஓதுகின்றார்கள். பழையதைக்கிண்டி பகைமையை புதுமையாக்கி தேர்தலில் வெற்றிபெறும் சூழ்ச்சிமங்களை ஒற்றுமையாய் பேசி முடிவெடுத்து தனித்தனியாய் கக்குகின்றனர்.

    ReplyDelete
  2. நீங்கள் இப்படிக் கூறுகிறீர்கள் ஆனால் BBSன் திட்டம் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்த்து ஓர் முக்கோண பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் த.தே.கூ. இராணுவத்தை குறைக்கச் சொல்கிரர்கள் எது நடக்கும்?

    ReplyDelete

Powered by Blogger.