Header Ads



சுவரேறிக் குதிக்க முயன்ற மாணவன், மின்சாரம் தாக்கி மரணம்

சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் மாணவர் ஒருவர் பள்ளிக்கூடத்தினுள் முறையற்ற வழியில் நுழைய முற்பட்ட போது மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது,

தாயிஃப் நகரின் அல் ஃபைசாலியா பகுதியில் அல் துஃபைல் நடுநிலைப் பள்ளி உள்ளது . இப்பள்ளியில்  படித்த மாணவர் ஒருவர் தாமதமாக வந்ததால், கதவுகள் பூட்டப்பட்டிருந்த பள்ளியின் சுற்றுச் சுவரேறிக் குதிக்க முயன்ற போது, சுவருக்கு மேல் கம்பிகளில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியுள்ளது.

மின் தாக்குதலுக்கு ஆளான அம்மாணவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மரணம் தழுவினார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இத்தகவலை, தாயிஃப் வட்டார பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முஹம்மது அல் ஷம்ரானி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.