Header Ads



பள்ளிவாசல் தாக்குதல், யானைகளின் அட்டகாசம், காணிப்பிரச்சனை பற்றி கலந்துரையாடல்

(ஏ.எல்.ஜனூவர்)

அம்பாரை மாவட்டத்தில் ஏற்படுகின்ற அசாதாரன சூழ் நிலைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பிரதேசம் தோறும் அமைக்கப்படுகின்ற சமாதானத்துக்கான ஆலோசனை சபை அமைத்தல் சம்பந்தமான கூட்டம் 16.09.2013 அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான றஜீவ விஜயசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் யானைகளின் அட்டகாசம், காணிப்பிரச்சனை, பள்ளிவாயல்கள் தாக்கப்படுதல் சம்பந்தமாகவும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் முன் வைக்கப்பட்டு இது பற்றி கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹாஜா முகைதீன், பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.