கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு சர்வதேச விருது
(Hafeez)
ஆசியாவில் மட்டுமல்ல உலகத்திலே ஆச்சர்யம் மிக்க நாடாக எமது நாடு திகழ்வதற்கு ஆசிரியர்களது பங்களிப்பும் அர்பணிப்பும் தேவை என்று மத்திய மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்தார். கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேற்படி கல்லூரியின் ஆங்கில தின வைபவம் மற்றும் பூகோளமயமாகள் செயற்திட்டத்தின் கீழ் பிர்டிஸ் கவுன்ஸில் நடத்திய உலகலாவிய பாடசாலைகளுக் கிடையிலான வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடத்திற்கான விருதை வென்றமை தொடர்பான பாராட்டு வைபவம் என்பவற்றிலே அவர் பிரதம அதிதயாகக் கலந்து கொண்டார். அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆசிரியர்களது தியாகம் அர்பணிப்பு என்பன மிக முக்கியம். ஒரு நாட்டை வழி நடத்துவதில் அவர்களது பங்களிப்பு மிக முக்கியம். பிர்டிஸ் கவுன்சில் நடத்தும் உலகலாவிய வகுப்பறைகள் கற்றல் அனுபவங்களை பறிமாறும் செயற்திட்டத்தின் கீழ் பல்வேறு நன்மைகளை பாடசாலைகள் அடைந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் இப்பாடசாலை இரண்டாவது முறையாகவும் அப் பரிசைப் பெற்றுள்ளமையும் அதற்காகக ஆசிரியர்கள் மேற்கொண்ட பங்களிப்பும் பாராட்டத் தக்கது.இவ்வாறு அர்பணிப்புடன் ஆசிரியர்கள் சகலரும் சேவை செய்தால் எமது நதடு ஆசியாவில் மட்டுமல்ல உலகிலேயே சிறந்த ஒரு நாடாக மாறும் என்றார்.
மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் ஆசிரியர் மாணவர் கௌரவிப்பு என்பனவும் இடம் பெற்றன. கல்லூரி அதிபர் திருமதி யூ.பி.வசீர்தீன் தலைமையில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.எம்.நஸார். பேராதனை ஆங்கில ஆசிரியர் கல்லூரி பீடாதிபதி எச்.எச். ஆரியதாச, ஆங்கிலப் பிரிவு கல்விப் பணிப்பாளர். எச்.சந்தநாயக்கா உற்பட இன்னும் பலர் பலந்து கொண்டனர்.
மனமாற வாழ்த்துகிறேன் உங்களின் முயற்சி தொடரட்டும், எமது பிள்ளைச் செல்வங்களுக்கு கொடுக்க கூடிய ஒரே சொத்து கல்வி மட்டும் தான் , இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் , கண்ணிய மிக்க ஆசிரியர்களிடம் வைக்கும் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய தொழில், தொழில் மட்டுமல்ல சேவை என்று தான் கூற வேண்டும் , டியுசன் வகுப்புக்களில் நீங்கள் செலுத்தும் கவனத்தை கொஞ்சம் பாடசாலையில் படிக்கும் மாணவர்களிடமும் செலுத்துமாறு பணிவாய் கேட்டுக்கொள்கிறேன், பல ஆசிரியர்களைப் பற்றி பெற்றோர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, பாடசாலையில் தங்களுடைய பாடங்களை உதாசீனம் செய்துவிட்டு டியுசன் வைத்து பணம் சம்பாதிக்கவே அவர்கள் முயற்சிசெய்கிறார்கள் என்பது தான்
ReplyDelete